பிரபல நடிகையை காதலிக்கிறாரா அனிருத்? கட்டிப்பிடி போட்டோக்களுடன் தீயாய் பரவும் தகவல்!
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் இசையமைப்பாளர் அனிருத்துக்கும் காதல் என சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று தீயாய் பரவி வருகிறது.
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து ஹீரோயினாக பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக இது என்ன மாயம் படத்தில் அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து, சூர்யா, விஜய், தனுஷ், விஷால் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார்.

திணறும் இணையம்
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் குறித்த தகவல் ஒன்று இணையத்தை திணறடித்து வருகிறது.

அனிருத்துடன் காதல்
அதாவது நடிகை கீர்த்தி சுரேஷும் இசையமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாக தகவல் பரவி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனிருத் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

நெருக்கமான போட்டோஸ்
அப்போது அனிருத்துடன் தான் நெருக்கமாக இருந்த போட்டோக்களை ஷேர் செய்து அவருக்கு வாழ்த்து கூறியிருந்தார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் கீர்த்தி சுரேஷின், அந்த போட்டோக்களை வைரலாக்கி வரும் நெட்டிசன்கள் இருவரும் காதலிப்பதாக கூறி வருகின்றனர்.

எந்த அளவுக்கு உண்மை?
மேலும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இதுகுறித்து கீர்த்தி சுரேஷோ அல்லது அனிருத்தோ இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

லிப்லாக் போட்டோஸ்
ஏற்கனவே அனிருத் நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியாவை காதலிப்பதாக தகவல் வெளியானது. இருவரும் லிப்லாக் கொடுத்துக் கொள்ளும் போட்டோக்களும் வெளியாகி கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாடகியுடன் காதல்
அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் இடம்பெற்றுள்ள "செல்லம்மா" பாடலை பாடிய பாடகி ஜோனிடா காந்தி உடன் அனிருத் காதல் உறவில் இருப்பதாக தகவல் பரவியது. இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷுடன் காதல் என்று தகவல் பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











