Anirudh Meme: கடைசி வரை மகிழ் திருமேனி வாங்க மாட்டாரு போல.. அனிருத்தை வச்சு வேற லெவல் வீடியோ மீம்!

சென்னை: தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிடும் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை விட ரசிகர்கள் வெளியிடும் ஃபேன் மேட் போஸ்டர்கள் தரமாகவும் தாறுமாறாகவும் உள்ளன. அதே போல காமெடி நடிகர்கள் சினிமாவில் செய்யும் (குறிப்பாக சந்திரமுகி 2) நகைச்சுவையை விட நெட்டிசன்கள் வெளியிடும் சில நிமிட வீடியோ மீம்கள் மற்றும் போட்டோ மீம்களே வயிறு குலுங்க சிரிக்க வைத்து விடுகின்றன.

Anirudh and Magizh Thirumeni video meme trending in social media

அப்படி ஒரு ஐட்டம் தான் தற்போது அனிருத்தையும் விடாமுயற்சி இயக்குநர் மகிழ் திருமேனியையும் வச்சு செய்து வருகிறது. அதை பார்த்தால் மகிழ் திருமேனியும் அனிருத்துமே நிச்சயம் சிரித்து விடுவார்கள்.

ஆல் இந்தியாவுக்கே ராக்ஸ்டார்: கோலிவுட்டின் ராக்ஸ்டாராக இருந்து வந்த கொலவெறி அனிருத் இப்போ ஆல் இந்தியாவுக்கே ராக்ஸ்டாராக மாறியுள்ளார். ஷாருக்கானின் ஜவான் படத்துக்கு தாறுமாறு பிஜிஎம் மற்றும் பாடல்களை போட்டு இந்திய ரசிகர்களை மட்டுமின்றி உலகளவில் உள்ள ஷாருக்கான் ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளார். அடுத்து டோலிவுட்டில் ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் தேவரா படத்துக்கும் பாடல்களை இசையமைத்து வருகிறார்.

வரிசையில் டாப் இயக்குநர்கள்: டாப் நடிகர்கள் மற்றும் டாப் இயக்குநர்கள் படங்களுக்கு இப்போதெல்லாம் ஏ.ஆர். ரஹ்மானை யாரும் அணுகுவதில்லை. அதிரடியாக இசையமைத்து துள்ளல் நடனம் போட வைக்கும் அனிருத் பின்னாடி தான் அனைவரும் ஓடுகின்றனர். நெல்சன், லோகேஷ் கனகராஜ், அட்லீ, ஷங்கர் மற்றும் ஞானவேல் என வரிசையாக பல இயக்குநர்கள் காத்திருப்பதாக மீம் ஒன்று டிரெண்டாகி வருகிறது.

அனிருத் வீடியோ மீம்: அனிருத் தனது பல சரக்கு கடையில் இருந்து ஒவ்வொரு இயக்குநர்களும் கேட்கும் பொருளை அள்ளி அள்ளி கொடுத்து வருகிறார் என்றும் ரொம்ப நேரமாக அந்த கடையின் வாசலில் நின்று கொண்டு எதையும் ஆர்டர் பண்ண முடியாமல் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி தடுமாறிக் கொண்டிருக்க மற்ற இயக்குநர்கள் அனிருத்திடம் இருந்து மியூஸிக் வாங்கி படங்களையே வெளியிட்டு வருவது போல கலாய்த்துள்ள வீடியோ மீம் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X