அனிருத்துக்கும் சாய் அபயங்கருக்கும் சண்டையா?.. அடபோங்கையா.. மதராஸி பாட்டு மாஸா வரப்போகுது!

சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மினி வசந்த் நடித்துள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதன் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகும் என்கிற அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீலக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ் சற்றுமுன் அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் அடுத்த பாக்ஸ் ஆபீஸ் கிங்காகவே சிவகார்த்திகேயன் மாறிவிட்டார். ரஜினிகாந்த், விஜய் மற்றும் கமல்ஹாசன் படங்களை தொடர்ந்து 300 கோடி கிளப்பில் இணைந்தது சிவகார்த்திகேயனின் அமரன் படம் தான்.

Anirudh and Sai Abhyankkar joined for Sivakarthikeyan s Madharasi first single stuns fans
Photo Credit:

அந்த படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், நாளை அந்த படத்தின் முதல் சிங்கிள் வெளியாகிறது. இதில், ஹைலைட் என்னவென்றால் அனிருத் மற்றும் சாய் அபயங்கர் இருவரும் இணைந்து பணியாற்றி இருப்பது தான்.

அனிருத்துக்கும் சாய் அபயங்கருக்கும் சண்டையா?: அனிருத்தை தாண்டி அட்லீ படத்தின் வாய்ப்பையே சாய் அபயங்கர் தட்டிப் பறித்து விட்டார் என்றும் சூர்யாவின் கருப்பு, மோகன்லால் தயாரிப்பில் வெளியாகும் பல்டி என சாய் அபயங்கர் கைவசம் 8 படங்கள் இருப்பதாக ஏகப்பட்ட மீம்கள் பறந்தன. ஆனால், அனிருத்தும் சாய் அபயங்கரும் இணைந்து சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை உருவாக்கி இருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

லுங்கி ப்ரோமோ வேறலெவல்: சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ், அனிருத், சூப்பர் சுப்பு காம்போவில் உருவான லுங்கி ப்ரோமோ வேறலெவலில் டிரெண்டாகி வருகிறது. அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் காம்பினேஷன் என்றாலே கலக்கலாக இருக்கும் என்பதை இந்த ப்ரோமோவும் நிரூபித்து இருக்கிறது. அதிலேயே சாய் அபயங்கரும் வந்திருந்தால் இன்னமும் கலக்கலாக இருந்திருக்கும் என்கின்றனர்.

சலம்பலா: காதல் தோல்வியில் புலம்பல் பாடலாக உருவாகக் கூடாது என்றும் ஹீரோ மட்டுமே ஃபீல் பண்ண அவரை சுற்றி இருக்கிறவர்கள் அதை பார்த்து கலாய்த்து ஜாலியாக இருப்பது போன்ற ஒரு பாடலை உருவாக்க வேண்டும் என முருகதாஸ் சொல்ல புலம்பலா.. சலம்பலா என எதுகை மோனையில் சூப்பர் சுப்பு சூப்பரான வார்த்தையை பிடிக்க அதுவே ஃபர்ஸ்ட் சிங்கிள் டைட்டிலாக மாறிவிட்டது.

மதராஸி ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போ?: அனிருத் இசையில், சூப்பர் சுப்பு வரிகளில் சாய் அபயங்கர் பாட, சிவகார்த்திகேயன் ஆட நாளை மாலை 6 மணிக்கு மதராஸி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது என்கிற அறிவிப்பை ஸ்ரீலக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ் தற்போது அறிவித்துள்ளது. அனிருத்துக்கும் சாய் அபயங்கருக்கும் ஒரு பக்கம் சண்டை முடிந்து விட்டுக் கொண்டிருந்த கும்பலுக்கு இப்போ தூக்கி வாரி போட்டிருக்கும் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

மதராஸி மாஸ் காட்டுமா?: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக வெளியான சல்மான் கானின் சிக்கந்தர் திரைப்படம் ராஷ்மிகா மந்தனா இருந்தும் காப்பாற்ற முடியாமல் ஃப்ளாப் ஆனது. இந்நிலையில், மதராஸி படம் ஏ.ஆர். முருகதாஸுக்கு கண்டிப்பாக மாஸ் கம்பேக்காக அமையும் என்கின்றனர். ஐ எம் வெயிட்டிங்னு சொன்னவரையே வெயிட் பண்ண வச்சிட்டீங்களே என சிவகார்த்திகேயன் சொல்வது போல, ஏ.ஆர். முருகதாஸ் கண்டிப்பாக முரட்டு கம்பேக் கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே சிவகார்த்திகேயனின் ரசிகர்களின் விருப்பம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X