Indian 2: இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் BGM போட்ட அனிருத்... வைப் ஆன ஷங்கர்... ட்ரெண்டாகும் வீடியோ

சென்னை: கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படம் அடுத்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

பல படங்களுக்கு இசையமைத்து வருவதால் பிஸியாகவே இருக்கும் அனிருத், இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட் சென்று பிஜிஎம் போட்டது ட்ரெண்டாகி வருகிறது.

 Anirudh and Shankars music composition video on the Indian 2 shooting spot is trending

இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் அனிருத்:கமல் - ஷங்கர் கூட்டணியில் கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் இந்தியன் 2. பட்ஜெட் பிரச்சினை, கிரேன் விபத்து என அடுத்தடுத்து பல பஞ்சாயத்துகள் வர இந்தப் படம் பாதியிலேயே முடங்கியது. கடந்தாண்டு சூப்பர் ஹிட் அடித்த விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் இந்தியன் 2 ஷூட்டிங் தொடங்கியது. அதேவேகத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தியன் 2 படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், விவேக், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதேபோல், ஷங்கர் வழக்கமாக ஏஆர் ரஹ்மானுடன் தான் கூட்டணி வைப்பார். ஆனால், இந்தப் படத்தில் முதன்முறையாக அனிருத்துடன் இணைந்துள்ளார். இருப்பினும் இந்தியன் முதல் பாகத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்த பிஜிஎம், இந்தியன் 2 படத்திலும் பயன்படுத்தப்படுகிறதாம்.

 Anirudh and Shankars music composition video on the Indian 2 shooting spot is trending

இந்நிலையில், இந்தியன் 2 முடிவுக்கு வருவதால் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளையும் தொடங்கிவிட்டார் ஷங்கர். அதில் முக்கியமாக படத்தின் பாடல்கள், பின்னணி இசை பணிகள் வேகமாக நடந்து வருகிறதாம். அனிருத் கைவசம் நிறைய படங்கள் இருப்பதால் 24 மணி நேரமும் பிஸியாகவே காணப்படுகிறார். இதனால், இந்தியன் 2 படத்திற்கு இசையமைக்க ஷூட்டிங் ஸ்பாட்டிற்கே நேரில் சென்றுள்ளார் அனிருத்.

இந்தியன் 2 படப்பிடிப்பின் நடுவே அனிருத்தும் ஷங்கரும் கேரவனில் அமர்ந்து இசையமைக்கும் வேலைகளை பார்த்து வருகின்றனர். இந்தியன் 2 படத்துக்கு அனிருத் பிஜிஎம் போட அதனை அருகில் இருந்து வைப் செய்கிறார் இயக்குநர் ஷங்கர். இந்த வீடியோ டிவிட்டரில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த கேரவன் செட்டப்பை பார்க்க அனிருத் இசையமைப்பதற்காகவே ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் விரைவில் இந்தியன் 2 படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 Anirudh and Shankars music composition video on the Indian 2 shooting spot is trending

இதனிடையே கமல் தனது போர்ஷன் முழுவதுக்கும் டப்பிங் கொடுத்து முடித்துவிட்டாராம். சென்னையிலேயே இந்தியன் 2 இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறுவதால், டப்பிங் கொடுப்பதையும் சேர்த்தே முடித்துவிட்டாராம் கமல். கமலைத் தொடர்ந்து மற்ற நடிகர்களும் டப்பிங் டாஸ்க்கை தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X