சிவகார்த்திகேயன் எழுத.. அனிருத் பாட.. ஒரே ஃபன்னுதான்! வைரல் வீடியோ!
Recommended Video
சென்னை: நம்ம வீட்டுப்பிள்ளை படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல் நேற்று வெளியானது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான மிஸ்டர் லோக்கல் படம் அந்தளவுக்கு பேசப்படவில்லை. இந்நிலையில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இமானுவேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்கின்றனர்.
நம்ம வீட்டுப்பிள்ளை படத்திற்கு இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் பாடலான எங்கள் அண்ணன் பாடல் கடந்த 23ஆம் தேதி வெளியானது.
எங்க அண்ணன் பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார். இந்நிலையில் படத்தின் மற்றொரு பாடலான காந்த கண்ணழகி பாடல் நேற்று மாலை வெளியானது.
இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். இந்த பாடலை இசையமைப்பாளரும், சிவகார்த்திகேயனின் நண்பருமான அனிருத் பாடியுள்ளார்.
இதன் ட்ராக்லிஸ்ட் அறிவிப்பை சன்பிக்சர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ரெக்கார்டிங்கில் சிவகார்த்திகேயனும் அனிருத்தும் செய்த அட்டகாசங்கள் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











