கத்தி 'செல்ஃபி' போட்டி: வெற்றியாளர்களுக்கு 'சர்பிரைஸ்' காத்திருக்கிறது
சென்னை: கத்தி செல்ஃபி போட்டியை அறிவித்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.
கத்தி படத்தில் விஜய் நடிப்பதோடு மட்டும் அல்லாமல் அனிருத் இசையில் ஒரு பாடலையும் பாடியுள்ளார். செல்ஃபி புள்ள என்ற அந்த பாடலை பாட வந்த விஜய்யுடன் அனிருத் ஒரு செல்ஃபி எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டார்.

மேலும் அவர் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
கத்தி போஸ்டர் பின்னணியில் செல்ஃபி எடுத்து அதை #KaththiSelfie என்ற டேக்கோடு போஸ்ட் செய்யுங்கள். சிறந்த செல்ஃபிக்கு கத்தி குழுவிடம் இருந்து சர்பிரைஸ் அதாவது ஆச்சரியம் காத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
அனிருத் ஏற்கனவே தனியாக நின்று ஒரு செல்ஃபியை எடுத்து வெளியிட்டுள்ளார். நல்லா தேடுறாங்கய்யா விளம்பரம்!
Comments


Click it and Unblock the Notifications