33 வயதுதான் ஆகுது.. இவ்வளவு சொத்தா.. வெயிட் பார்ட்டியா மாறிட்டாரே.. அனிருத் சொத்து மதிப்பு தெரியுமா?

சென்னை: Anirudh Birthday (அனிருத் பிறந்தநாள்) தமிழ் சினிமாவில் இப்போது நம்பர் 1 இசையமைப்பாளராக இருக்கும் அனிருத் இன்று தனது 33ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.

தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். முதல் படத்திலேயே வெரைட்டியான இசையை கொடுத்து ஒட்டுமொத்த கோலிவுட்டையும் திரும்பி பார்க்க வைத்தார். முக்கியமாக ஒய் திஸ் கொலவெறி பாடல் உலக அளவில் ட்ரெண்டானது. இதனையடுத்து இன்னும் பல வருடங்களுக்கு அனிருத்தின் ஆட்சிதான் கோலிவுட்டில் நடக்கப்போவதாக உறுதிபட கூறினார்கள்.

Anirudh Birthday Today Here is the Anirudhs Net Worth Details

அனிருத் ஆட்சி: அதனை உறுதிப்படுத்தும் விதமாக அனிருத்துக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அவர் இசையமைத்த அத்தனை படங்களின் பாடல்களும் அதிரிபுதிரி ஹிட்டடித்தன. 90களில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வந்தபோது எந்த மாதிரியான அதிர்வை தமிழ் சினிமா கண்டதோ அதேபோல் அனிருத் வருகையின்போதும் இருந்ததாக பலர் வியந்தபடி சொன்னது குறிப்பிடத்தக்கது.

அனிருத் இல்லாமல் இல்லை: ஒருகட்டத்தில் அனிருத் இசை இல்லாமல் படங்கள் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. விஜய், ரஜினி போன்ற முன்னணி ஹீரோக்களே அனிருத்தின் இசை இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அனிருத் பயங்கர பிஸியாக இருக்கிறார். சிம்புவின் 48ஆவது படத்துக்குக்கூட அனிருத்திடம் முதலில் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் ஆனால் டேட் இல்லாததால் அனிருத் ஒத்துக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

பிஸி: அனிருத்தின் இசையில் கடைசியாக ஜெயிலர், ஜவான் ஆகிய படங்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து 19ஆம் தேதி லியோ படம் ரிலீஸாகவிருக்கிறது. மேலும் ரஜினியின் அடுத்த படமான தலைவர் 171 படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். சொல்லப்போனால் மாதத்துக்கு ஒரு படம் அவரது இசையமைப்பில் வெளியாகிவருவது குறிப்பிடத்தக்கது. ஜவான் படத்தின் பாடல்களும் ஹிட்டடித்திருப்பதால் தொடர்ந்து ஹிந்தியிலும் அவருக்கு வாய்ப்புகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது

அனிருத் பிறந்தநாள்: இந்நிலையில் அனிருத் இன்று தனது 33ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். மேலும் பிறந்தநாள் ட்ரீட்டாக லியோ படத்தை அவர் கொடுக்கவும் இருக்கிறார். இந்த சூழலில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

சொத்து மதிப்பு: அனிருத்தின் சொத்து மதிப்பு தகவல் பலரையும் மலைக்க வைத்திருக்கிறது. அதாவது அவருக்கு மொத்தம் 50 கோடி ரூபாயிலிருந்து 60 கோடி ரூபாய்வரை சொத்து இருக்கலாம் என கூறப்படுகிறது. ஒரு படத்துக்கு அவர் பத்து கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும் இந்த சம்பளம் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கும் சம்பளத்தைவிட அதிகம் என்றும் ஒரு தகவல் உலாவுவது கவனிக்கத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X