Anirudh: இளையராஜா,ஏ.ஆர் ரகுமான் செய்யாத சாதனை.. 45 நிமிடங்கள்.. தூக்கிச் சாப்பிட்ட அனிருத்!
சென்னை: இசையமைப்பாளர் அனிருத், ராக்ஸ்டார் அனிருத் என தென்னிந்திய சினிமாவில் இசை உலகில் உச்சத்தில் இருப்பவர் அனிருத். இவர் படங்களுக்கு இசை அமைப்பது மட்டும் இல்லாமல், உலகம் முழுவதும் சென்று இசைக் கச்சேரிகளை நடத்தி வரும் இவர் தற்போது சென்னையை அடுத்துள்ள திருவிடந்தையில் இசைக்கச்சேரி நடத்தவுள்ளார். இதற்காக இன்று டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. இந்த டிக்கெட் விற்பனை தொடங்கிய 45 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டதாக அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமா உலகில் இசையில் புதிய மாற்றத்தையும், தனது தாக்கத்தையும் ஏற்படுத்தியவர் அனிருத். இவரது இசையில் ஒரு படம் வெளியாகிறது என்றால் இவரது பாடல்கள், பின்ன இசை, படத்தின் தீம் மியூசிக் ஆகியவற்றை திரையரங்கில் படத்தின் காட்சிகளோடு பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் திரையரங்கிற்கு செல்லும் ரசிகர்கள் ஏராளம்.
ஒரு பாடலை அவர் உருவாக்குகிறார் என்றால் அதில் அந்த நடிகரின் பட்டைப் பெயர்களுடன் பாடலை, தீம் மியூசிக் உருவாக்குவதில் அனிருத் உண்மையிலேயே கெட்டிக் காரார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு, " தலைவரு நிரந்தரம்" , கமல்ஹாசனுக்கு, " நாயகன் மீண்டும் வரான்", விஜய்க்கு மாஸ்டர் படத்தில் அவர் இசையமைத்த " தளபதி" தீம் மியூசிக் என்பது, இப்போது விஜய்யின் டைட்டில் கார்டு மியூசிக்காக மாறிவிட்டது.

ஹுக்கும் World Tour: அனிருத் இசையமைத்த படத்தின் இசை வெளியீட்டு விழா என்றாலே ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு போவார்கள். அப்படி இருக்கும்போது அவரது இசைக் கச்சேரி என்றால் சும்மா இருப்பார்களா? நரம்பு புடைக்க செம எனர்ஜியோடு அனிருத் பாடும் மாஸ் பாடல்கள் தொடங்கி, கண்ணீரைக் கொட்ட வைக்கும் மெலடி பாடல்கள் வரை அனைத்தையும் நேரில் கேட்க நினைக்கும் ரசிகர்களுக்கு இன்பச் செய்தியாக அமைந்ததுதான் ஹுக்கும் World Tour இசை நிகழ்ச்சி தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது என்பது.
45 நிமிடத்தில்: வரும் 26ஆம் தேதி மாலை நடத்தப்படவுள்ள இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை இன்று அதாவது ஜூலை 7ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு தொடங்கியது. டிக்கெட் புக்கிங் ஆன்லைனில் தொடங்கிய 45 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளது. ரூபாய் 1600 இல் இருந்து தொடங்கிய இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை என்பது, 45 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்ததை அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் உள்ள இசையமைப்பாளர்களில் யாருடைய இசைக் கச்சேரிக்கும் இவ்வளவு குறுகிய காலத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விதிமுறைகள்:: 5 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளை அழைத்து வந்தாலும் அவர்களுக்கும் டிக்கெட் வாங்க வேண்டும், மொத்தம் 4 மணி நேரம் இசை நிகழ்ச்சி நடைபெறும், திறந்தவெளி மைதானத்தில் தான் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அனைத்து வயதினரும் இசை கச்சேரி நிகழ்ச்சியில் ரசிகர்களாக கலந்து கொள்ளலாம். செல்லப்பிராணிகளை அழைத்து வர அனுமதி இல்லை. இருக்கை வசதியும் உள்ளது, நின்று கொண்டும் நிகழ்ச்சியை ரசிக்கலாம். ஆனால் டிக்கெட் விலை அதற்கு ஏற்றது போல மாறுபடும் என பல விதிமுறைகளையும் தகவல்களையும் டிக்கெட் முன்பதிவு செய்யும் இணையதளத்திலேயே குறிப்பிட்டுள்ளார்கள். மொத்தம் 3000 பேர் வரை கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











