ரூ.2 கோடி கேட்ட அனிருத்: ஆடிப்போன உதயநிதி
உதயநிதியின் நான்காவது படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இதற்காக அவர் கேட்ட சம்பளம்தான் உதயநிதியை ஆடிப்போக வைத்ததாம்.
ஒய் திஸ் கொல வெறி என்ற ஒரே பாடல் மூலம் உலகப் புகழ்! பெற்றவர் அனிருத். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹிட் பாடல்கள் தந்த அனிருத் இதுவரை ஐந்து படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

வேலையில்லா பட்டதாரி
சமீபத்தில் அனிருத் இசையமைப்பில் வெளியான வேலையில்லா பட்டாரி திரைப்பட பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது.

கையில் நாலு படம்
தற்போது அனிருத் 'கத்தி, ஆகோ, காக்கிச் சட்டை, நானும் ரவுடிதான்" ஆகிய படங்களுக்கு இசையமைப்பதில் பிஸியாக உள்ளார்.

உதயநிதி படத்தில்
உதயநிதி ஸ்டாலின் நான்காவதாக என்றென்றும் புன்னகை படத்தை இயக்கிய அகமது படத்தில் நடிக்கவுள்ளார் இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் இசையமைப்பாளராக அனிருத்தை ஏற்கனவே கமிட் செய்து வைத்திருந்தனர்.

ரூ.2கோடி சம்பளம்
படத்தில் ஒப்பந்தம் செய்தபோது சம்பளத்தை பற்றி பேசாமல், இருந்த அனிருத் சமீபத்தில்தான் பேசினாராம். இப்படத்துக்காக அவர் 2 கோடியை சம்பளமாக கேட்டிருக்கிறார்.

ரூ. 1.5கோடிக்கு சம்மதம்
இதை கேட்ட உதயநிதி ஆடி போய்விட்டாராம். பின் பேச்சுவார்த்தைக்கு பிறகு 1.5 கோடி என்று முடிவாகியுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











