இந்தியன் 2 சம்பவம் செய்யும்.. அவ்வளவு உழைத்திருக்கிறோம்.. அனிருத் அளித்த உறுதி

சென்னை: கமல் ஹாசன் இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துவிட்டு தக் லைஃப் படத்தில் கமிட்டாகியிருக்கிறார். மக்களவைத் தேர்தல் காரணமாக படத்தின் ஷூட்டிங் இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக அன்பறிவ் இயக்கத்திலும் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார். இப்படி வரிசையாக படங்கள் வைத்திருக்கும் கமல் ஹாசன் இந்தியன் 2 படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார். இந்தியன் 2 படமானது ஜூலை 12ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் என்ற பெயரை பெற்றவர் ஷங்கர். அவர் இயக்கத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் இந்தியன். கமல் ஹாசன், மனீஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. ஷங்கரின் கரியரில் மிக முக்கியமான படமாகவும் இந்தியன் அமைந்தது.

Kamal Haasan Indian 2 Anirudh

ரஜினிக்கு சென்ற கதை: முதலில் இந்தியன் திரைப்படத்தின் கதையை ரஜினிகாந்த்திடம்தான் சொன்னார் ஷங்கர். ரஜினியை மனதில் வைத்துதான் இந்தியன் படத்தின் ஹீரோ தனது நெற்றியில் விழும் முடியை ஒதுக்கும் மேனரிசத்தை யோசித்திருந்தார். ஆனால் ரஜினிகாந்த் சில காரணங்களால் அந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை. பிறகு கமல் ஹாசன் உள்ளே வந்தார். அவர் உள்ளே வந்தாலும் ரஜினிக்காக யோசித்து வைத்திருந்த அந்த முடி ஒதுக்கும் மேனரிசத்தை கமல் ஹாசனை வைத்து செய்ய வைத்தார். அதுவும் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது.

பக்கா ஆல்பம்: அந்தப் படத்தின் மேக்கிங், கேமரா, இசை என அத்தனையும் பக்காவாக இருந்தன. முக்கியமாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசை அந்தப் படத்தின் வெற்றிக்கு மேலும் பலம் கூட்டியது. அதேபோல் எழுத்தாளர் சுஜாதா எழுதிய வசனங்களும் படத்துக்கு பெரிதாக உதவின. குறிப்பாக, 'வெளிநாட்டில் கடமையை மீறுவதற்கு லஞ்சம்; இங்குதான் கடமையை செய்வதற்கே லஞ்சம்" என்ற வசனம் நெற்றிப்பொட்டில் அடித்தது போல் இருக்கும். இப்படி எல்லா ஏரியாவிலும் படம் பக்காவாக இருந்ததால் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது.

இந்தியன் 2: இந்தியன் படத்தின் க்ளைமேக்ஸில் அதற்கான இரண்டாம் பாக லீடோடு முடித்திருந்தார் ஷங்கர். இருந்தாலும் படத்தின் இரண்டாம் பாகம் பல வருடங்களாகவே ஆரம்பிக்கப்படவில்லை. ஒருவழியாக சில வருடங்களுக்கு முன்பு படத்தின் வேலைகள் ஆரம்பித்தபோது ஏற்பட்ட விபத்தால் உயிரிழப்புகள் ஏற்பட படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. தற்போது ஷூட்டிங் முடிந்து படமும் ரிலீஸாகவிருக்கிறது. அடுத்த மாதம் 12ஆம் தேதி வெளியாகிறது படம். ட்ரெய்லர் இன்று மாலை 7 மணிக்கு ரிலீஸாகிறது.

சித்தார்த் பேச்சு: இந்நிலையில் இந்தியன் 2 படக்குழு இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தது. இதில் கமல் ஹாசன், ஷங்கர், சித்தார்த், அனிருத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அனிருத், "இந்தியன் 2 படத்துக்காக எல்லோரும் உழைத்திருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். திரையரங்கில் படத்தை பார்க்கும்போது அது உங்களுக்கே தெரியும். நிச்சயமாக இந்தியன் 2 படம் சம்பவம் செய்யும் என்பதை உறுதியாக கூறுகிறேன்" என்றார்.

விமர்சனம்: இதற்கிடையே சில வாரங்களுக்கு முன்பு இந்தியன் 2 படத்தின் ஆடியோ வெளியானது. அதனை கேட்ட ரசிகர்கள், 'தாத்தா வராரு கதறவிட போறாரு' என்ற பாடலை கடுமையாக விமர்சனம் செய்தனர். முக்கியமாக இந்தியன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை படத்துக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. ஆனால் அனிருத் அமைத்திருக்கும் இசை கனெக்ட்டே ஆகவில்லை என்று தாறுமாறாக சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: kamal haasan indian 2 anirudh
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X