மூதாட்டியுடன் மோனிகா பாட்டுக்கு ஆட்டம் போட்ட அனிருத்.. மனசுக்குள்ள கஷ்டமா இருப்பதையும் சொல்லிட்டாரே

சென்னை: தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக கலக்கிக் கொண்டிருக்கிறார் அனிருத். பெரிய பட்ஜெட் படங்கள், தனக்கு நெருக்கமானவர்களின் படங்களுக்கு இசையமைப்பது என இருக்கிறார். இவரது இசையில் கடைசியாக வெளியான படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி. அடுத்ததாக இவரது இசையில் வெளியாக இருந்த படம் எல்.ஐ.கே. இந்த படம் வரும் 18ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவரது இசையில் அடுத்து வெளியாக உள்ள படம் என்றால் அது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன். இந்த படம் வரும் ஜனவரி மாதம் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அனிருத் தனது இசையில் உருவான கூலி படத்தில் இடம் பெற்று உலக அளவில் டிரெண்ட் ஆன பாடலான மோனிகா பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். வழக்கமாகவே அனிருத் நடத்தில் கலக்குவார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இம்முறை மூதாட்டி ஒருவருடன் இணைந்து நடனம் ஆடியுள்ளார். அந்த மூதாட்டியும் அனிருத் உடன் நடனம் ஆடுகிறோம் என்று மிகவும் உற்சாகமாக நடனமாடினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Anirudh Dance With Old Lady For Monica Song Video attracts Social

கஷ்டமா இருக்கு: அதேபோல் செய்தியாளர்களைச் சந்திக்கும் போது அவர் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது," தற்போது ஜன நாயகன் படத்தின் பின்னணி இசை அமைத்து வருகிறேன். அந்த வேலைகள் தான் சிறப்பாக நடந்து வருகிறது. இது தளபதியின் கடைசி படம் என்பதால் மனதிற்குள் வருத்தமாக உள்ளது. இசை வெளியீட்டு விழாவில், தளபதிக்கு ட்ரிபியூட் செய்வதைப் போல ஜன நாயகன் படம் இல்லாமல் நான் அவரது படங்களுக்கு இசையமைத்த கத்தி, பீஸ்ட், மாஸ்டர், லியோ படங்களில் இடம் பெற்ற பாடல்கள் எல்லாம் சேர்த்து சிறப்பாக செய்ய காத்துக் கொண்டு இருக்கிறேன். அவரது கடைசி படம் என்பதால் மனதிற்குள் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.

நன்றி: தளபதி கச்சேரி பாடலுக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. அதேபோல் அரசன் படத்தின் தீம் மியூசிக்கிற்காக ரசிகர்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. அரசன் படத்தின் படப்பிடிப்பு நேற்றுதான் தொடங்கி உள்ளது. அந்த படம் வெளியாக எப்படியும் ஒரு ஆண்டாவது ஆகும்" என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X