அனிருத் ஒரு முடிவோடுதான் இருக்காரு போல.. ஆத்தாடி சம்பளம் மட்டும் இத்தனை கோடி ரூபாயா?

சென்னை: தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார் அனிருத். ரஜினி, கமல், விஜய், அஜித் என டாப் ஹீரோக்கள் எல்லோரின் படங்களுமே அனிருத் ஸ்டூடியோவுக்கு சென்றுவிடுகின்றன. சம்பளமும் அவர் ஒரு படத்துக்கு பத்து கோடி ரூபாய் அளவில் வாங்குவதாக கூறப்படுகிறது. அதை பார்த்தே அனைவரும் வாயை பிளந்தார்கள். இப்போது மேற்கொண்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக அவரது சம்பளம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினியின் மனைவியுடைய சகோதரன் மகன் அனிருத். சிறு வயதிலிருந்தே இசையின் மீது இருந்த ஆர்வத்தை அடுத்து; 3 படத்தில் அவரை தனுஷ் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். அனிக்கு சினிமா ஒத்துவருமா என்று பெற்றோர்கள் தயங்கியபோது அவருக்கு சினிமா மட்டும்தான் ஒத்து வரும் நம்புங்கள் என்று அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து; அனிருத்தை திரைத்துறைக்கு அழைத்து வந்தார். அனியும் தனுஷின் நம்பிக்கையை முதல் படத்திலேயே பன்மடங்கு நிரூபித்துவிட்டார். அனைத்து பாடல்களும் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தன.

Anirudh Demands 20 Crore for Telugu Film Producer Shocked by Salary Ask
Photo Credit:

சென்சேஷனல் இசையமைப்பாளர்: 3 பட இசைக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அவர் இசையமைத்த ஒவ்வொரு படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் ஹிட்டடிக்க ஆரம்பித்தன. இதனால் படிப்படியாக அவர் உயர்ந்து; அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் இசையமைக்க ஆரம்பித்துவிட்டார். ரஜினி முதல் சிவகார்த்திகேயன்வரை அவரது இசை இருந்தால்தான் செட் ஆகும் என்ற மனநிலைமைக்கு வந்துவிட்டார்கள். இதன் காரணமாக அனிருத்தும் குறுகிய காலத்திலேயே டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக மாறிவிட்டார். ஹீரோக்கள் மட்டுமின்றி ஷங்கர் உள்ளிட்ட இயக்குநர்களும் அனிருத் இசைக்கு செல்ல ஆரம்பித்தார்கள்

கடுமையான விமர்சனமும் உண்டுதான்: அவரது எந்த அளவுக்கு கொண்டாடப்படுகிறதோ அதே அளவு விமர்சனத்தையும் சந்திக்கிறது. ஒரே இசையை வேறு வேறு மாதிரி கொடுக்கிறார் என்ற பேச்சும், அவர் வந்த பிறகுதான் தமிழ் பாடல்களில் வரிகளின் தரம் குறைந்து; சத்தம் மட்டுமே இருக்கிறது என்றும் பலர் சொல்வார்கள். சமீபத்தில் வெளியான KHXRK படத்தின் ப்ரோமோ இசைகூட ஏற்கனவே கேட்டது மாதிரி இருக்கிறதே என்ற விமர்சனங்கள் எழுந்தன. அந்த விமர்சனங்களை எல்லாம் தாண்டி இளைஞர்களால் அனிருத்தின் இசை கொண்டாடப்படுகிறது.

Also Read
கீர்த்தி சுரேஷ் திருமணம்னா போவார்.. திரிஷாவுக்கு வாய் திறக்கமாட்டார்.. விஜய் மீது ப்ளூ சட்டை மாறன் அட்டாக்
கீர்த்தி சுரேஷ் திருமணம்னா போவார்.. திரிஷாவுக்கு வாய் திறக்கமாட்டார்.. விஜய் மீது ப்ளூ சட்டை மாறன் அட்டாக்

அடுத்த படங்கள்: அனிருத் கைகளில் இப்போது எக்கச்சக்கமான படங்கள் இருக்கின்றன. லோகேஷ் கனகராஜும், அல்லு அர்ஜுனும் இணையவிருக்கும் படத்துக்கு அனிருத்தான் இசை. ஏற்கனவே ஜூனியர் என்.டி.ஆர் நடித்திருந்த தேவாரா படத்துக்கு இசையமைத்திருந்தார். ஆனால் சுமாரான வரவேற்பையே இசை பெற்றது. எனவே இந்தப் படத்தின் மூலம் தெலுங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற முனைப்பில் அவர் இருக்கிறார். இன்னும் சில மாதங்களில் அவர் இசையமைப்பில் ஜெயிலர் 2 படமும் வரவிருக்கிறது.

அனிருத் பற்றி புதிய தகவல்: இந்நிலையில் அவர் பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அவர் பத்து கோடி ரூபாய் சம்பளம் இப்போது வாங்கிக்கொண்டிருக்கிறார் என்பது திரைத்துறையில் பேச்சு. ஆனால் இப்போது அதையும் ஏற்றியிருக்கிறாராம். அதன்படி தெலுங்கு படம் ஒன்றுக்கு இசையமைக்க வந்த அப்ரோச்சின்போது; தனக்கு சம்பளமாக இருபது கோடி ரூபாய் வேண்டுமென கேட்க; அந்த தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியில் உறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X