அனிருத் vs ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. கொலவெறி பாட்டு தான் ‘3’ படத்தோட அடையாளம்.. கடுப்பான ரசிகர்கள்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது கணவர் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதன் முறையாக இயக்கிய '3’ திரைப்படத்தில் அனிருத் இசையமைத்த ' ஒய் திஸ் கொலவெறி’ பாடல் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அந்த படத்தில் தான் அனிருத் முதன்முறையாக இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவர் இசையமைத்த ' ஒய் திஸ் கொலவெறி’ பாடல் அப்பொழுதே யூடியூப் தளத்தில் 10 கோடி பார்வைகளை அள்ளி மிகப்பெரிய சாதனையை நடத்தியது. படம் வெளியாவதற்கு முன்னதாக அந்தப் பாடல்தான் மிகப்பெரிய அடையாளமாக அந்தப் படத்திற்கே மாறியது.

Anirudh fans trolled Aishwarya Rajinikanth and poured memes for her latest Kolaveri comment


முழு ஆல்பமும் சூப்பர் ஹிட்: தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான '3’ படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முதன்முறையாக இயக்கியிருந்தார். அனிருத் இசையில் வெளியான, ' ஒய் திஸ் கொலவெறி’, ’கண்ணழகா ’, ' நீ பார்த்த விழிகள்’, ’ இதழின் ஓரம்’, ' கம் ஆன் கேர்ள்ஸ்’, ’ போ நீ போ’ என அத்தனை பாடல்களும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து இழுத்து வெற்றி பெற்றது. இன்னமும் அந்த படத்தின் பாடல்கள் பலரது ரிங்டோனாகவும் ஃபேவரைட் லிஸ்டிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓவர் ஷேடோ பண்ணிடுச்சு: சமீபத்தில் லால் சலாம் படத்தின் புரமோஷனுக்காக பேட்டி அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசும்போது, ஒய் திஸ் கொலவெறி பாடல் அந்தப் படத்தையே ஓவர் ஷேடோ செய்து விட்டதாகவும் அந்தப் பாடல் காரணமாக படம் பெரிய அடி வாங்கியது என்றும் பேசியது அனிருத் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த்க்கு எதிராக தொடர்ந்து சோசியல் மீடியாவில் மீம்களையும் ட்ரோல்களையும் அனிருத் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

அனிருத்தை கழட்டிவிட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: முதல் படத்தில் அனிருத்தை அறிமுகப்படுத்தியதே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான். ஆனால், அதன் பின்னர் அனிருத்துடன் அவர் பயணிக்கவே இல்லை என்பதுதான் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ’வை ராஜா வை’ படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். அதேபோல தற்போது வெளியாகியுள்ள லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Anirudh fans trolled Aishwarya Rajinikanth and poured memes for her latest Kolaveri comment


அந்தப் பாடல்தான் அடையாளமே: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் அனிருத்துக்கும் அவரது பாடலுக்கும் எதிராக பேசியது ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. '3’ படத்தை காரணமே அனிருத்தின் இசை மற்றும் ஒய் திஸ் கொலவெறி பாடல் தான் என ரசிகர்கள் கமெண்டுகளையும் மீம்களையும் போட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்தை கலாய்த்து வருகின்றனர். கடந்த ஆண்டு ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வெற்றியடைய காரணமாக இருந்த அனிருத்தை இப்படி அசிங்கப்படுத்தும் விதமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசாமல் தவிர்த்து இருக்கலாம் என்றும் அட்வைஸ் செய்து வருகின்றனர். அடுத்து வேட்டையன் படத்திலும் அனிருத்தின் வெறித்தனமான இசை படத்தை வெற்றியடைய செய்யும் என்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு நன்றியே இல்லை என கொந்தளித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் தான் காரணமா?: நடிகர் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே பிரச்சனை வெடித்த நிலையில், சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து அனிருத் இசையமைத்த வந்த நிலையில் அதுதான் இவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட காரணமா என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X