விஜய்க்காக ஒரு கொலவெறி டியூன் ரெடி பண்ணும் அனிருத்
சென்னை: விஜய்யை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் எடுக்கும் படத்தில் தளபதிக்கு கொலவெறி பாடல் போன்று ஒரு சூப்பர் ஹிட் கொடுக்க அனிருத் முடிவு செய்துள்ளாராம்.
ஐஸ்வர்யா தனுஷின் 3 படம் மூலம் இசையமைப்பாளர் ஆனவர் அனிருத். அந்த படத்தில் வரும் ஒய் திஸ் கொலவெறி பாடல் மூலம் உலகப் புகழ் பெற்றுவிட்டார். இதையடுத்து அவர் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை ஆகிய படங்களிலும் ஹிட் பாடல்கள் கொடுத்தார்.

இந்நிலையில் அவர் விஜய்யை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்தில் இசையமைக்கிறார். படத்தில் விஜய்யை ஒரு பாடலாவது பாட வைக்க வேண்டும் அதை கொலவெறி ரேஞ்சுக்கு புகழ் பெற வைக்க வேண்டும் என்று அனிருத் தீர்மானித்துள்ளார். அதற்காக சூப்பராக ஒரு டியூனை போடும் வேலையில் தற்போதே ஈடுபட்டுள்ளாராம்.
அப்படி என்றால் விஜய்க்கு ஒரு சூப்பர் ஹிட் பாடல் கன்பர்ம்.
Comments


Click it and Unblock the Notifications