ரஜினி ரசிகர்களுக்கு பிறந்த நாள் ட்ரீட் கொடுத்த அனிருத்!
தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் வரும் நவம்பர் 7ம் தேதி வெளியாகும் என்ற அறிவித்துள்ளார் அனிருத்.
Recommended Video
சென்னை: இசையமைப்பாளர் அனிருத் இன்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பிறந்த நாள் அதுவுமாக ரஜினி ரசிகர்களுக்கு ஸ்பெஷல் அப்டேட்டை கொடுத்துள்ளார்.
அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் வரும் நவம்பர் 7ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஹேப்பி பர்த்டே ராக்ஸ்டார்
ராக்ஸ்டார் அனிருத்தின் 29வது பிறந்த நாள் இன்று அவரது ரசிகர்களால் சமூக வலைதளங்களில் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரபலங்கள் பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர். அக்டோபர் 16ம் தேதி 1990ம் ஆண்டு பிறந்த அனிருத் இளம் வயதிலேயே தனது இசை திறமையால் பல விருதுகளை அள்ளி தமிழகத்தின் இளம் இசை புயலாக மாறியுள்ளார்.

தல, தளபதி, தலைவர்
தனுஷின் '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், தனது முதல் பாடலான ‘ஒய் திஸ் கொலவெறி' பாடலின் மூலம் உலக ஃபேமஸ் ஆனார்.
கத்தி, வேதாளம், பேட்ட என விஜய், அஜித், ரஜினி என தமிழ்நாட்டின் முன்னணி நட்சத்திரங்களுக்கு இசையமைத்துள்ள அனிருத், அடுத்ததாக தளபதி 64, தர்பார், இந்தியன் 2 படங்களிலும் பிசியாக இசையமைத்து வருகிறார்.

தர்பார் அப்டேட்
இசையமைப்பாளர் அனிருத் தனது 29வது பிறந்த நாளை கொண்டாடி வரும் வேளையில், ரஜினி ரசிகர்களுக்கு பிறந்த நாள் ட்ரீட் வைக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தர்பார் படம் குறித்த அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளார்.
வரும் நவம்பர் 7ம் தேதி அனிருத் இசையில் உருவாகி வரும் ரஜினியின் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் வெறித்தனமான தலைவரின் தீம் மியூசிக் வெளியாகும் என்பது தான் அந்த அப்டேட்.
ரஜினி ரசிகர்கள் குஷி
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படம் குறித்த எந்தவொரு அப்டேட்டும் சமீபத்தில் வெளிவராத நிலையில், அனிருத் கொடுத்துள்ள இந்த அசத்தல் அப்டேட்டால் ரஜினி ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். மேலும், பிறந்தநாள் கொண்டாடி வரும் அனிருத்தை வாழ்த்தியும் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











