சென்னை திரைப்படவிழாவில் 'யூத் ஐகான்' விருது பெறும் அனிருத்
சென்னை: சென்னையில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் இளம் இசையமைப்பாளர் அனிருத்துக்கு யூத் ஐகான் விருது வழங்கப்பட உள்ளது.
சென்னையில் 11 வது சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12ம் தேதி தொடங்கி 8 நாட்கள் நடக்கிறது. இதில், 25 தமிழ்ப் படங்கள் உள்பட 150 படங்கள் திரையிடப்படுகின்றன.
தமிழ் சினிமாவில் உள்ள பிரபல இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை உறுப்பினர்களாகக்கொண்ட 'இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேசன்' அமைப்பு கடந்த 2003-ம் ஆண்டு முதல் சென்னையில் சர்வதேச பட விழாக்களை நடத்தி வருகிறது.

கமல் - அமீர்கான்
திரைப்பட விழாவின் துவக்க நிகழ்ச்சியில் உலகநாயகன் கமலஹாசனும், ஹிந்தித் திரையுலகின் ஆமீர்கானும் பங்கு பெறுகின்றனர். 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் இந்த விழாவில் கலந்துகொள்கின்றன.

பரதேசி, தங்கமீன்கள்
இந்த விழாவினை சிறப்பிக்கும் வகையில் தமிழ்திரைப்படங்களான மூடர் கூடம், கும்கி, மரியான், மூன்று பேர் மூன்று காதல், பரதேசி, அன்னக்கொடி, பொன்மாலைப் பொழுது, சூதுகவ்வும், தங்கமீன்கள் மெழுகுவர்த்திகள், ஆதலால் காதல் செய்வீர் போன்ற படங்கள் இந்த திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளன.

அனிருத்
இத்திரைப்பட விழாவில், வளர்ந்துவரும் தமிழ்த் திரையுலகின் இசையமைப்பாளரான அனிருத் ரவிசந்தர் இளைய தலைமுறையின் அடையாளமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 'யூத் ஐகான்' விருதினைப் பெற உள்ளார்.

அமிதாப் பச்சன் - ஷபனா ஆஸ்மி
இந்த சர்வதேச படவிழாவின் நிறைவு விழா டிசம்பர் 19-ந் தேதி நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், நடிகை ஷபனா ஆஸ்மி ஆகியோர் கலந்துகொண்டு விருதுகளை வழங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











