Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வேலையில்லா பட்டதாரியில் நண்பருக்கு வில்லன் 'வேலை' வாங்கிக் கொடுத்த அனிருத்!
வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றியை நாயகன் தனுஷை விட, வில்லன் அமிதேஷ்தான் சந்தோஷமாகக் கொண்டாடி வருகிறார்.
கர்நாடகத்தைச் சேர்ந்த இந்த இளைஞர் மும்பையில் நடிப்புப் பயிற்சி பெற்றவர்.
இப்போது சென்னையில் வசித்து வருகிறார். இசையமைப்பாளர் அனிருத்தின் நெருங்கிய நண்பர் இவர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, வழக்கம்போல, ஒரு சரக்குப் பார்ட்டியில் வைத்து அமிதேஷை தனுஷுக்கு அறிமுகம் செய்து வைத்தாராம் அனிருத்.
உடனே, 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் வில்லன் வேடத்தில் அமிதேஷை ஒப்பந்தம் செய்தார் தனுஷ் (படத்துக்கு கிட்டத்தட்ட 'கோஸ்ட் டைரக்டர்' என்பதால் தனுஷ் என்ன சொன்னாலும் மறுப்பில்லை!)
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமிதேஷ், படத்தின் வெற்றி குறித்த தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், "அறிமுகமானது வில்லன் வேடத்தில் என்றாலும், எந்த மாதிரி வேடத்திலும் நடிக்க தயாராக உள்ளேன். குறிப்பாக ஹீரோவாக நடிக்க வேண்டும் என்றுதான் ஆசை. அதற்கு முதல்படியாகத்தான் வில்லன் வேடத்தை ஒப்புக் கொண்டேன்," என்றார்.
இவரது வில்லன் நடிப்பை தனுஷ், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் வெகுவாகப் பாராட்டினார்களாம்.