twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மடக்கும் கேள்வி.. பட்டென பதில் சொன்ன அனிருத்.. மலையாள விக்ரம் விழாவில் சுவாரஸ்யம்!

    |

    சென்னை : மலையாள விக்ரம் படத்தின் வெற்றி விழாவில் எடக்கு முடக்காக கேள்வி கேட்ட பத்திரிக்கையாளருக்கு சரியான பதிலடி கொடுத்தார் இசையமைப்பாளர் அனிருத்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3ந் தேதி வெளியான திரைப்படம் விக்ரம். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்திருக்கும் இப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது.

    படம் வெளியாகி 12 நாட்கள் முடிவடைந்த நிலையில் உலகம் முழுவதும் விக்ரம் ரூ 317 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

     பகத் பாசில் அசால்ட்டாக கண்ணுலேயே நடிச்சுட்டு போயிருவாரு... நடிகர் சிவகார்த்திகேயன்! பகத் பாசில் அசால்ட்டாக கண்ணுலேயே நடிச்சுட்டு போயிருவாரு... நடிகர் சிவகார்த்திகேயன்!

    விக்ரம்

    விக்ரம்

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் விக்ரம். மேலும் இந்த படத்தில் நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், ஆர்.ஜே.மகேஸ்வரி, மைனா நந்தினி, ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    கதையே வேறு

    கதையே வேறு

    கமல்ஹாசன் நடிப்பில் 1986ம் ஆண்டு வெளிவந்த பழைய விக்ரம் படத்தின் இரண்டாம் பாகம் என கூறப்பட்டது. ஆனால், பழைய விக்ரம் படம் பூமியில் இருந்து வான்வெளிக்கு பறக்க இருந்த ராக்கெட் கடத்தலை தடுக்கும் கதையாகும். புது விக்ரம் போதை பொருள் கடத்தலையும், போலீஸ் துரத்தலையும் பற்றிய கதையாகும்.

    இயக்குநர் ஆசைபட்டார்

    இயக்குநர் ஆசைபட்டார்

    கமல்ஹாசன் அண்மையில் அளித்த பேட்டியில், பழைய விக்ரம் படத்திற்கும், புது விக்ரம் படத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை, இயக்குநர் லோகேஷ் இந்த பெயர் வைத்தால் நன்றாக இருக்கும் என்று ஆசைபட்டார் அதனால் , விக்ரம் என்று பெயர் வைக்கப்பட்டதாக கமல் பேட்டியில் கூறியிருந்தார்.

    ரூ 317 கோடி வரை வசூல்

    ரூ 317 கோடி வரை வசூல்

    கமல் நடித்த படங்களிலேயே முதல் நாளில் மிக அதிகமான வசூலை விக்ரம் படம் குவித்துள்ளது. தமிழ் நாட்டில் அதிக அளவுக்கு விக்ரம் படம் கலெக்ஷனை அள்ளி உள்ளது. அதே நேரத்தில் தமிழகம் தாண்டி அண்டை மாநிலம், நாடுகள் என அனைத்து இடங்களிலும் விக்ரம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் படம் வெளியாகி 12 நாட்கள் முடிவடைந்த நிலையில் உலகம் முழுவதும் விக்ரம் ரூ 317 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இயக்குநருக்கு கார் பரிசு

    இயக்குநருக்கு கார் பரிசு

    தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, வட இந்தியா என எல்லா இடங்களிலும் விக்ரம் படத்திற்கு ரசிகர்கள் மிக பெரிய வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று பிளாக் பஸ்டர் வரவேற்பை பெற்று வருகிறது. விக்ரம் திரைப்படம் வெற்றி பெற்றதற்கு லோகேஷ் கனகராஜுக்கு காரையும், படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்கள் அனைவருக்கும் இருசக்கர வாகனத்தை பரிசாக அளித்துள்ளார்.

    Recommended Video

    Marmayogi , Marudhanayagam Release பற்றி பேசிய கமல் | Vikram Success Meet | *Kollywood
    ஏடாகூட கேள்வி

    ஏடாகூட கேள்வி

    இந்நிலையில், மலையாளத்தில் விக்ரம் திரைப்படம் வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் , இசையமைப்பாளர் அனிருத்தும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ஒரு செய்தியாளர், அனிருத்திடம், கமல் சார் லோகேஷிற்கு காரை பரிசாக அளித்துள்ளார். அதேபோல சூர்யாவுக்கு வாட்சை பரிசாக அளித்துள்ளார். உங்களுக்கு எதுவும் பரிசு கொடுக்கவில்லையா என்று கேள்வி கேட்டார்.

    நெத்தியடி பதில்

    நெத்தியடி பதில்

    இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத அனிருத், எனக்கு விக்ரம் படத்தை பரிசாக கொடுத்து இருக்கிறார் இதுவே எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு என கூறினார். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த விக்ரம் படத்தில் அனிருத்தின் பின்னணி இசை சும்மா கிளாசாக இருந்தது. விக்ரம் படத்தின் பத்தல பத்தல பாடல் மிகப்பெரிய அளவில் ஹாட்டானது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Anirudh gives an interesting answer at the Malayalam Vikram Film press meet
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X