மாரி தனுஷுக்கு மாஸ்னா, ரஜினிக்கு மரண மாஸ்: பாரபட்சமில்லாமல் அனிருத் கொலகுத்து
Recommended Video

சென்னை: மருமகனுக்கு போட்ட அதே மாஸ் போன்ற பாடலை மாமனாருக்கும் கொடுத்துள்ளார் அனிருத்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. இந்நிலையில் அனிருத் இசையில் மரண மாஸ் பாடலை எஸ்.பி.பி. பாடியுள்ளார்.
மரண மாஸ் பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் இசை சும்மா மாஸாகவே உள்ளது என்று கூற வேண்டும். சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள அந்த மேக்கிங் வீடியோ ரஜினி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.
பேட்ட
மரண மாஸ் பாடலின் இசை செமயாக உள்ளது. பாடலை எஸ்.பி.பி. குரலில் கோட்டால் சொல்லவே வேண்டாம் மரண மரண மாஸாகத் தான் இருக்கும்.
மாரி
மாரி படத்தில் தனுஷுக்காக ஒரு மரண குத்து இசையை கொடுத்தார் அனிருத். தனுஷுக்கு மாஸ் என்றால் ரஜினிக்கு மரண மாஸாக இசையை கொடுத்துள்ளார் அனி.

அனிருத்
மருமகன் தனுஷ், மாமனார் ரஜினிக்கு பாரபட்சமில்லாமல் கொல மாஸாக பாடல் கொடுத்துள்ளார் அனிருத். பேட்ட படத்தில் வரும் மரண மாஸ் பாடல் நிச்சயம் ஹிட்டாகும் என்பதில் சந்தேகமே இல்லை. வாழ்த்துக்கள் அனிருத்.

வெயிட்டிங்
இந்த பொங்கல் தல பொங்கல் மட்டும் அல்ல தலைவர் பொங்கலும் கூட. ரசிகர்கள் எல்லாம் மரண வெயிட்டிங்கில் உள்ளனர். பேட்ட பொங்கலை கொண்டாடித் தீர்க்க ரசிகர்கள் ஏற்கனவே தயாராகிவிட்டனர்.


Click it and Unblock the Notifications











