ஏ.ஆர்.ரஹ்மானை மிஞ்சிய அனிருத்?.. ஜெயிலர் 2 படத்துக்கு இத்தனை கோடி சம்பளமா?.. வாயை பிளந்த கோலிவுட்
சென்னை: தமிழ் சினிமாவில் இப்போது நம்பர் 1 இடத்தில் இருக்கும் இசையமைப்பாளர் என்றால் அவர் அனிருத்தான். பெரிய ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என வரிசையாக அவர்களின் படங்களுக்கு இசையமைத்துவருகிறார். தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் கால் பதித்திருக்கும் அவர் தற்போது கூலி, விடாமுயற்சி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துவருகிறார். அடுத்ததாக ஜெயிலர் 2 படத்துக்கு இசையமைக்கிறார். இந்தச் சூழலில் ஜெயிலர் 2 படத்துக்கு அனிருத் வாங்கியிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
ரஜினிகாந்த்தின் உறவினர் அனிருத். ரஜினியின் மகளை தனுஷ் திருமணம் செய்து ஒன்றாக இருந்தபோது தனுஷுடன் அனிக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கத்தின் அடிப்படையிலும், அவரிடம் திறமை இருந்ததாலும் 3 படத்தில் இசையமைப்பாளராகும் வாய்ப்பை வழங்கினார் தனுஷ். அப்படத்தை தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கியிருந்தார். படம் வணிக ரீதியாக வெற்றிபெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக சூப்பர் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆல்பம் ஹிட்: அந்தப் படத்தில் ஹைலைட்டாக அமைந்தது பாடல்கள்தான். ஒய் திஸ் கொலவெறி, கண்ணழகா போன்ற பாடல்கள் எல்லாம் அதிரிபுதிரி ஹிட்டடித்தன. முக்கியமாக ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகளவில் அனிருத்தை ஃபேமஸாக்கியது. அதேசமயம் அந்தப் பாடல் விமர்சனத்தை சந்திக்கவும் தவறவில்லை. இருந்தாலும் யார் இந்த இசையமைப்பாளர் என்று பலரும் திரும்பி பார்த்தார்கள். அந்தப் படத்துக்கு பிறகு டேவிட், எதிர்நீச்சல், வணக்கம் சென்னை என வரிசையாக ஆல்பம் ஹிட்டுகளாக கொடுக்க ஆரம்பித்தார் அனிருத்.
முன்னணி இசையமைப்பாளர்: இப்படி வரிசையாக ஹிட்டுகளை கொடுத்துக்கொண்டிருந்ததால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளரானார் அனிருத். அதேசமயம் அனிருது இப்போதைய இசையை கெடுத்து வைத்துவிட்டார். ஒரே ட்யூனை அடுத்தடுத்த படங்களுக்கு போட்டுக்கொண்டிருக்கிறார். பாடலை கேட்கும்போது காதுகளில் ரத்தம்தான் வருகிறது என்று அவரை ரசிகர்கள் ட்ரோல் செய்யவும் தவறவில்லை. இருப்பினும் அனிருத் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருக்கிறார்.
ஹிந்தியிலும் அனிருத்: குறிப்பாக ஒருகாலத்தில் டாப் ஹீரோக்களை வைத்து படம் எடுத்த இயக்குநர்கள் எல்லாம் எப்படி ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவுக்கு படையெடுக்க ஆரம்பித்தார்களோ அதேபோல் இப்போது விஜய், அஜித், ரஜினிகாந்த், கமல் ஆகியோரை வைத்து படங்கள் எடுக்கும் இயக்குநர்கள் இசையமைப்பாளர் என்கிற இடத்தில் ஆட்டோமேட்டிக்காக அனிருத் பெயரை எழுதிவிடுகின்றனர். தமிழில் மட்டும் கலக்கிவந்த அவர் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமாகியிருக்கிறார்.அங்கும் அவருக்கு வரிசையாக வாய்ப்புகள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மானின் அட்வைஸ்: இப்படி அசுர வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் அனிருத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் ஒரு அட்வைஸ் வழங்கினார். காதலிக்க நேரமில்லை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ரஹ்மான், 'பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து ஹிட் கொடுப்பது சாதாரணமான விஷயமில்லை. அது அனிருத்திடம் இருக்கிறது. அதனால்தான் அவரால் நிலைக்க முடிகிறது. அவர் கர்னாட்டிக் இசையையும் கற்றுக்கொள்ள வேண்டும்' என்று கூறியிருந்தார்.
உச்சத்தில் சம்பளம்: அனிருத்தின் இசையமைப்பில் கூலி, விடாமுயற்சி படங்கள் உருவாகியிருக்கின்றன. அடுத்ததாக ஜெயிலர் 2 படம் உருவாகவிருக்கிறது. இந்நிலையில் அந்தப் படத்துக்காக அனிருத் வாங்கியிருப்பதாக ஒரு சம்பள தொகை கூறப்படுகிறது. அதன்படி அவர் 18 கோடி ரூபாயை சம்பளமாக வாங்கியிருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் ஏ.ஆர்.ரஹ்மானையே சம்பளத்தில் அனிருத் மிஞ்சிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் ரஹ்மான் 12 கோடி ரூபாய்வரைதான் சம்பளமாக வாங்குகிறார் என்ற ஒரு பேச்சும் இண்டஸ்ட்ரியில் உண்டு.


Click it and Unblock the Notifications











