»   »  6 வது முறையாக கூட்டணி அமைத்த அனிருத்- சிவகார்த்திகேயன்

6 வது முறையாக கூட்டணி அமைத்த அனிருத்- சிவகார்த்திகேயன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரெமொவைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த பட வாய்ப்பையும் கைப்பற்றியிருக்கிறார் அனிருத்.

தொடர் வெற்றிகளால் தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர் சிவகார்த்திகேயன் மாறியிருக்கிறார் .

Anirudh Got Sivakarthikeyan's Next Movie

ரஜினி முருகன் படத்தைத் தொடர்ந்து ரெமோ, மோகன் ராஜாவின் அடுத்த படம் ஆகியவற்றில் சிவகார்த்திகேயன் தற்போது பிஸியாக நடித்து வருகிறார்.

மோகன் ராஜா படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நயன்தாரா, பஹத் பாசில் ஆகியோர் நடிக்கவிருக்கின்றனர்.

இதனால் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை அனிருத் கைப்பற்றியிருக்கிறார்.

3, எதிர்நீச்சல், மான் கராத்தே, காக்கிச்சட்டை, ரெமோ படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - அனிருத் இருவரும் 6 வது முறையாக இப்படத்தில் இணைவது குறிப்பிடத்தக்கது.

English summary
Anirudh Got Sivakarthikeyan-Nayanthara's Next Movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos