Anirudh - ஓய்வு எடுக்கப்போகும் அனிருத்.. காரணம் இதுதான்.. அவரே சொன்ன விவரம் உள்ளே

சென்னை: Anirudh (அனிருத்) சினிமாவிலிருந்து தற்காலிக ஓய்வு எடுக்கப்போவதாக இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்திருக்கிறார்.

கோலிவுட்டில் இப்போதைக்கு பிஸியான இசையமைப்பாளர் என்றால் அது அனிருத்தான். 3 படத்தின் மூலம் அறிமுகமாகி ஒய் திஸ் கொலை வெறி டி பாடல் மூலம் ஓவர் நைட்டில் ஒபாமா ஆன அவர் அடுத்தடுத்து பல படங்களுக்கு இசையமைத்து ஹிட்டடித்தார். இதன் காரணமாக அனிருத் இல்லாமல் சினிமாவில் அணுவும் அசையாது என்ற நிலை உருவாகியிருக்கிறது.

Anirudh has announced that he will take a Short break from cinema

முன்னணி ஹீரோக்கள்: ஏ.ஆர்.ரஹ்மான் 90களில் எப்படி தமிழ் சினிமாவை ஆட்சி செய்தாரோ அதேபோல்தான் அனிருத்தும் இப்போது இருக்கிறார். ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு அனிருத்தே இசையமைக்கிறார். ஏன் இந்தியன்2வில்கூட அனிருத்தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயிலர் வெற்றி விழாவில் பேசிய ரஜினிகாந்த்கூட, அனிருத் இந்தப் படத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றுவிட்டார் என்று கூறி ஆச்சரியப்படுத்தினார்.

ஹிந்தியில் அனிருத்: தமிழில் தனது சாம்ராஜ்ஜியத்தை வலுவாக்கி வைத்திருக்கும் அனிருத் அட்லீ இயக்கத்தில் உருவான ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியிலும் என்ட்ரி கொடுத்திருக்கிறார். படத்துக்கு கலவையான விமர்சனங்கள் தமிழ்நாட்டில் கிடைத்தாலும் பாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்தது. முக்கியமாக அனிருத்தின் இசை பெரிதளவில் கொண்டாடப்பட்டது. மேற்கொண்டு சில வாய்ப்புகள் கிடைக்கலாம் என கருதப்படுகிறது.

அடுத்தடுத்த படங்கள்: அனிருத்தை பொறுத்தவரை கடந்த சில மாதங்களாகவே வரிசையாக படங்களுக்கு இசையமைத்துவருகிறார். அதன்படி ஜெயிலர், ஜவான், லியோ ஆகிய படங்கள் அடுத்தடுத்த மாதங்களில் ரிலீஸாகின. மேலும் பிஸியாக வலம் வந்துகொண்டிருக்கும் அனிருத் தனது சம்பளத்தையும் பத்து கோடி ரூபாயாக உயர்த்திவிட்டார் என்ற தகவலும் கோடம்பாக்கத்தில் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்காலிக ஓய்வு: இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் சினிமாவிலிருந்து தற்காலிக ஓய்வெடுக்கப்போகிறார். அதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் பேசுகையில், "மார்கழி சீசன் போன்ற இசை நிகழ்ச்சிகளை சிறு வயதில் இருந்தே பார்த்துதான் வளர்ந்திருக்கிறேன். கடந்த மூன்று மாதங்களில் நிறைய படங்களுக்கு இசையமைத்துவிட்டேன். அதன் காரணமாக வரும் இரண்டு மாதங்களுக்கு ஓய்வு எடுக்க முடிவு செய்திருக்கிறேன். அதன் பிறகு நிறைய படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ரிலீஸாகும்"" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X