Anirudh - ஏ.ஆர்.ரஹ்மானை ஓரங்கட்டிய அனிருத்? .. அட இது அனிருத் காலம்தான் போல
சென்னை: Anirudh (அனிருத்) சம்பள விஷயத்தில் ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைப்பாளர் அனிருத் ஓரங்கட்டிவிட்டார் என தகவல் வெளியாகியிருக்கிறது.
தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். முதல் படத்திலேயே வெரைட்டியான இசையை கொடுத்து ஒட்டுமொத்த கோலிவுட்டையும் திரும்பி பார்க்க வைத்தார். முக்கியமாக ஒய் திஸ் கொலவெறி பாடல் உலக அளவில் ட்ரெண்டானது. இதனையடுத்து இன்னும் பல வருடங்களுக்கு அனிருத்தின் ஆட்சிதான் கோலிவுட்டில் நடக்கப்போவதாக ஆரூடம் கூறினார்கள்.

அனிருத் ஆட்சி: அதனை உறுதிப்படுத்தும் விதமாக அனிருத்துக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அவர் இசையமைத்த அத்தனை படங்களின் பாடல்களும் அதிரிபுதிரி ஹிட்டடித்தன. 90களில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வந்தபோது எந்த மாதிரியான அதிர்வை தமிழ் சினிமா கண்டதோ அதேபோல் அனிருத் வருகையின்போதும் இருந்ததாக பலர் வியந்தபடி சொன்னது குறிப்பிடத்தக்கது.
ஒருகட்டத்தில் அனிருத் இசை இல்லாமல் படங்கள் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. விஜய், ரஜினி போன்ற முன்னணி ஹீரோக்களே அனிருத்தின் இசை இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுவதாகவும் கூறப்படுகிறது.
அனிருத் லைன் அப்: விஜய் நடித்திருக்கும் லியோ, ரஜினி நடித்திருக்கும் ஜெயிலர், கமல் நடித்திருக்கும் இந்தியன் 2 என வரிசையாக ரவுண்டு கட்டி அடித்துவருகிறார் அனிருத். சமீபத்தில் லியோ படத்திலிருந்து வெளியான நா ரெடிதான் பாடலும், ஜெயிலரிலிருந்து வெளியான காவாலா பாடலும் கடந்த சில வாரங்களாக ட்ரெண்டிங்கில் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.
ஜவான்: கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட்டிலும் எண்ட்ரி ஆகியிருக்கிறார் அனிருத். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான நடித்திருக்கும் ஜவான் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. அட்லீயின் மேக்கிங் ஒருபக்கம் தீயாக இருக்க அனிருத்தின் இசை படத்தை வேறு எங்கோ கொண்டு போய்விடும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.மேலும் பாலிவுட்டிலும் அனி ஆட்சி தொடங்கப்போகிறது என்றும் தெரிவிக்கின்றனர்.

விமர்சனம்: இப்படி எந்த அளவுக்கு அனிருத் புகழப்படுகிறாரோ அதே அளவு அவர் மீது கடுமையான விமரனங்களையும் சிலர் முன்வைக்கின்றனர். அதாவது அனிருத் பாடல்களில் வெறும் சத்தம் மட்டும்தான் இருக்கிறது. பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க மறுக்கிறார். இதனால் தற்போது வரும் பாடல்கள் எல்லாம் அடுப்பிலிருந்து இறக்கியதும் சாப்பிட்டால் மட்டும் நன்றாக இருக்கும் ஃபாஸ்ட் ஃபுட் போல் பாடல் வெளியான சில வாரங்கள் மட்டுமே கேட்டால் நன்றாக இருக்கிறது எனவும் ஓபனாகவே கூறிவருகின்றனர்.
இசைப்புயலை ஓரங்கட்டிய ராக் ஸ்டார்: இந்நிலையில் அதிகம் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர் லிஸ்ட்டில் ஏ.ஆர்.ரஹ்மானை அனிருத் முந்திவிட்டார் என புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு படத்துக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும் ஆனால் அனிருத்தோ ஜவான் படத்துக்காக 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது அனிருத்தின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











