துணிவு சில்லா சில்லா... அஜித் ரசிகர்களுக்கு பைத்தியம் பிடிக்கும்… இது அனிருத் வச்ச ட்விஸ்ட்
சென்னை: அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.
ஹெச் வினோத் இயக்கியுள்ள துணிவு படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.
இந்நிலையில், துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'சில்லா சில்லா' குறித்து அனிருத் ஒரு முக்கியமான அப்டேட் கொடுத்துள்ளார்.

பொங்கலுக்கு வெளியாகும் துணிவு
வலிமை படத்தைத் தொடர்ந்து அஜித் நடித்துள்ள துணிவு வரும் பொங்கலை முன்னிடுட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. அஜித் - ஹெச் வினோத் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ள இந்தப் படம், ஆக்சன் ஜானரில் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், மங்காத்தா படத்திற்கு பின்னர் அஜித் நெகட்டிவான கேரக்டரில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், துணிவு படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதால், இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு பிஸியாக உள்ளது.

சில்லா சில்லா அப்டேட்
விஜய்யின் வாரிசு படத்தில் இருந்து 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' என்ற முதல் பாடல் வெளியாகிவிட்டது. இதனால், அஜித் ரசிகர்களும் துணிவு ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது ரிலீஸாகும் என காத்திருக்கின்றனர். ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள துணிவு முதல் பாடலை அனிருத் பாடியுள்ளது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. 'சில்லா சில்லா' என்ற டைட்டிலில் ஜிப்ரான் கம்போஸ் செய்துள்ள துணிவு ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அஜித் ரசிகர்கள் வைப்ரேஷன் மோடிலேயே இருந்து வருகின்றனர்.

அனிருத் வச்ச ட்விஸ்ட்
இதனிடையே துணிவு படத்தின் சில்லா சில்லா பாடலின் போஸ்டரையும் அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில், துணிவு படத்தின் சில்லா சில்லா பாடல் குறித்து பேசியுள்ள அனிருத், "இந்தப் பாடல் எனது கேரியரில் மிகப்பெரிய ஹிட் லிஸ்ட்டில் ஒன்றாக இருக்கும். சில்லா சில்லா பாடலை கேட்டால் அஜித் ரசிகர்களுக்கு பைத்தியமே பிடித்துவிடும்" என்றுள்ளார். வேதாளம் படத்தில் 'ஆலுமா டோலுமா'' பாடலைப் பாடி அஜித் ரசிகர்களை தெறிக்கவிட்ட அனிருத், இப்போது துணிவு ஃபர்ஸ்ட் சிங்கிளான 'சில்லா சில்லா' பாடலையும் பாடியுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீக்கிரமே ரிலீஸ்
துணிவு படத்தின் சில்லா சில்லா பாடல் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்ட இருக்க, விரைவில் ரிலீஸ் அப்டேட்டை படக்குழு வெளியிடும் என சொல்லப்படுகிறது. இதனிடையே துணிவு படத்துக்கும் வாரிசு படத்துக்கும் சமமாக திரைகள் ஒதுக்கப்படும் என ரெட் ஜெயன்ட் சார்பில் உதயநிதி சமீபத்தில் தெரிவித்துள்ளார். அஜித் - விஜய் படங்கள் என்ற போட்டியில்லாமல் துணிவு - வாரிசு இரண்டுக்குமே ஸ்கீரின்ஸ்கள் கிடைக்கும் என கூறியிருந்தார். இதனால், அஜித் - விஜய் ரசிகர்கள் கொஞ்சம் கூலாகி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











