ப்பா.. என்னா திறமை.. அனிருத்தை ஆச்சரியப்பட வைத்த மாற்றுத்திறனாளி இளைஞர்.. தீயாய் பரவும் வீடியோ!

சென்னை: இரண்டு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் இசைக்கருவிகளை பட்டையை கிளப்புவதை பார்த்து மெய் சிலிர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத்.

Recommended Video

Exclusive: Master official Release date | Lokesh Kanagaraj

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருகிறார். பெரிய பட்ஜெட் படங்கள் முன்னணி நடிகர்களின் படங்கள் என பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

அவரது துள்ளல் இசை பாடல்களை ரசிப்பதற்கு என்றே என தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ரஜினியின் பேட்ட, தர்பார் ஆகிய படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார்.

மாஸ்டர் படம்

மாஸ்டர் படம்

அஜித், விஜய், தனுஷ், தனுஷ், சூர்யா என முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். அவரது இசையில் உருவான விஜயின் மாஸ்டர் படம் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது.
இளம் வயதிலேயே ஏராளமான விருதுகளை குவித்துள்ளார் அனிருத்.

அசந்துப் போன அனிருத்

அசந்துப் போன அனிருத்

இந்நிலையில் மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவரின் அபாரத் திறமையை கண்டு அசந்து போயிருக்கிறார் அனிருத். அதாவது இரண்டு கைகளும் இல்லாத மாற்றுத் திறனாளி இளைஞர் ஒருவர் மியூஸிக் பேடு மற்றும் கீ போடு ஆகியவற்றை அட்டகாசமாக கையாண்டிருக்கிறார்.

அற்புதமான திறமை


மாஸ்டர் படத்தில் இடம் பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலை அருமையாக இசையமைத்திருக்கிறார். அந்த இளைஞர் வாசிக்கும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கும் அனிருத்,
அட்டகாசம்! அற்புதமான திறமை கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் சகோதரர்! என்று பதிவிட்டுள்ளார்.

வெறித்தனம்

வெறித்தனம்

அனிருத் ஷேர் செய்துள்ள இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் லைக் செய்துள்ளனர். அந்த இளைஞரின் வீடியோவை பார்த்த இந்த நெட்டிசன், நிஜமாவே வெறித்தனம்.. ரொம்ப பெரிய திறமை.. இதை ஷேர் செய்ததற்கு நன்றி என கூறியுள்ளார்.

விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால்

இந்த வீடியோவை நடிகர் விஷ்ணு விஷாலும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். மேலும் இதை மக்கள் பார்க்க வேண்டும்.. தூய திறமைக்கு அப்பால், எதுவும் உங்களைத் தடுக்க முடியாது..
நேர்மறையாக இருங்கள்.. என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Read more about: anirudh அனிருத்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X