புத்தாண்டுக்கு அனிருத் கொடுக்கும் சர்பிரைஸ்: நாளை வரை காத்திருங்க
சென்னை: புத்தாண்டையொட்டி அனிருத் ஒரு சர்பிரைஸ் கொடுக்க உள்ளார்.
தலைவர் வெறியனான அனிருத்துக்கு ஒரு வழியாக அவர் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது. அனிருத் இசையில் பேட்ட பட பாடல்கள் செமயாக வந்துள்ளன.

எஸ்.பி.பி.யை அவர் பாட வைக்கிறேன் என்று அழைத்து வந்து இரண்டு வரி மட்டுமே கொடுத்த போதிலும் பேட்ட ஆல்பம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. பேட்ட ஆல்பத்தை ரிப்பீட் மோடில் போட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் புத்தாண்டுக்கு ஒரு சர்பிரைஸ் கொடுக்கப் போகிறாராம் அனி. இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
உங்களுக்காக புத்தாண்டையொட்டி ஒரு பாடல் காத்திருக்கிறது. நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் #NewYearGroove #GumOnGroove என்று தெரிவித்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications