யப்பா செம நட்பா இருக்கே.. நெல்சன் திலீப்குமாருக்கு அனிருத் செய்த உதவி என்ன தெரியுமா?

சென்னை: அனிருத்தான் தற்போது கோலிவுட்டின் நம்பர் ஒன் இசையமைப்பாளராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பிஸியாகியிருக்கிறார் அவர். அவரது இசையமைப்பில் கடைசியாக தேவரா படம் வெளியானது. அடுத்ததாக வேட்டையன், கூலி உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. இந்தச் சூழலில் நெல்சன் திலீப்குமாருக்கு அனிருத் உதவி செய்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கோலிவுட்டில் இப்போதைக்கு பிஸியான இசையமைப்பாளர் என்றால் அது அனிருத்தான். 3 படத்தின் மூலம் அறிமுகமாகி ஒய் திஸ் கொலை வெறி டி பாடல் மூலம் ஓவர் நைட்டில் ஒபாமா ஆன அவர் அடுத்தடுத்து பல படங்களுக்கு இசையமைத்து ஹிட்டடித்தார். இதன் காரணமாக அனிருத் இல்லாமல் சினிமாவில் அணுவும் அசையாது என்ற நிலை உருவாகியிருக்கிறது.

anirudh nelson dilipkumar junior ntr

முன்னணி ஹீரோக்கள்: ஏ.ஆர்.ரஹ்மான் 90களில் எப்படி தமிழ் சினிமாவை ஆட்சி செய்தாரோ அதேபோல்தான் அனிருத்தும் இப்போது இருக்கிறார். ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு அனிருத்தே இசையமைக்கிறார். ஏன் இந்தியன்2வில்கூட அனிருத்தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயிலர் வெற்றி விழாவில் பேசிய ரஜினிகாந்த்கூட, அனிருத் இந்தப் படத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றுவிட்டார் என்று கூறி ஆச்சரியப்படுத்தினார்.

ஹிந்தியில் அனிருத்: தமிழில் தனது சாம்ராஜ்ஜியத்தை வலுவாக்கி வைத்திருக்கும் அனிருத் அட்லீ இயக்கத்தில் உருவான ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியிலும் எண்ட்ரி கொடுத்திருக்கிறார். படத்துக்கு கலவையான விமர்சனங்கள் தமிழ்நாட்டில் கிடைத்தாலும் பாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்தது.முக்கியமாக அனிருத்தின் இசை பெரிதளவில் கொண்டாடப்பட்டது. மேற்கொண்டு சில வாய்ப்புகள் அவருக்கு கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அனிருத்தின் சம்பளம்: அனிருத்தை பொறுத்தவரை வரிசையாக படங்களுக்கு இசையமைத்துவருகிறார். அதன்படி ஜெயிலர், ஜவான், லியோ ஆகிய படங்கள் கடந்த வருடத்தில் அடுத்தடுத்த மாதங்களில் ரிலீஸாகின. மேலும் பிஸியாக வலம் வந்துகொண்டிருக்கும் அனிருத் தனது சம்பளத்தையும் பத்து கோடி ரூபாயாக உயர்த்திவிட்டார் என்ற தகவலும் கோடம்பாக்கத்தில் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்த படங்கள்: அனிருத்தின் இசையமைப்பில் கடைசியாக தேவரா திரைப்படம் வெளியானது. ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.முக்கிய்மாக அனிருத்தின் இசையும் பெரிதாக கொண்டாடப்படவில்லை. அதேபோல் தேவரா படத்துக்கு முன்னதாக வெளியான இந்தியன் 2 படத்திலும் அனிருத்தின் இசை கடுமையாக விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நெல்சனுக்கு செய்த உதவி: இந்நிலையில் அனிருத் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது நெல்சன் திலீப்குமாரும், அனிருத்தும் நெருங்கிய நண்பர்கள். நெல்சனின் முதல் படமான கோலமாவு கோகிலாவில் நயன் நடிப்பதற்கு முக்கிய காரணமும் அனிருத்தான். சூழல் இப்படி இருக்க தேவரா படத்தின்போது ஜூனியர் என்.டி.ஆரையும் நெல்சனையும் சந்திக்க வைத்ததாகவும்; அப்போது நெல்சன் சொன்ன கதையில் நடிக்க ஜூனியர் என்.டி.ஆர் ஒத்துக்கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X