சிம்பு - வெற்றிமாறன் பட ப்ரோமோ தாமதம்.. வேலையை காண்பித்த அனிருத்?.. அவரால்தான் சிக்கலா?
சென்னை: சிம்புவும், வெற்றிமாறனும் இணையவிருக்கும் படம் அதிக ஹைப்புகளை சந்தித்திருக்கும் படங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. இருவரும் ஏற்கனவே வடசென்னை படத்தில் இணைவதாக இருந்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. இத்தனை வருடங்கள் கழித்து அவர்கள் முதன்முறையாக இணைந்திருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அப்படத்துக்கு அனிருத் இசையமைப்பதாக கூறப்படுகிறது.
சின்ன வயதிலிருந்து நடித்துவரும் சிம்பு எத்தனையோ இயக்குநர்களுடன் பணியாற்றிவிட்டார். அந்தப் படங்கள் ஹிட், ஃப்ளாப் என இரண்டு ரிசல்ட்டுகளையும் பார்த்திருக்கிறது. படம் எப்படி இருந்தாலும் அதில் சிம்புவின் உழைப்புக்கு எப்போதுமே பஞ்சம் இருந்ததில்லை. தொடர்ந்து நடித்துவந்த அவர்; இடையில் சில காரணங்களால் பிரேக் எடுத்தார். ஒருவழியாக மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கும் எஸ்டிஆர் தனது இரண்டாவது இன்னிங்ஸில் பிஸியாக இருக்கிறார்.
ஹிட்டுகள் கொடுக்கும் சிம்பு: அந்தவகையில் அவர் நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட். கடைசியாக நடித்த தக் லைஃப் படம் தோல்வி படம். இருப்பினும் அதில் கமல்தான் ஹீரோ என்பதால் சிம்புவுக்கு பெரிய சேதாரம் எதுவும் இல்லை. அடுத்ததாக அஸ்வத் மாரிமுத்து, தேசிங்கு பெரியசாமி, வெற்றிமாறன் ஆகியோரின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் அவர்.

செம ஹைப்: இந்தப் படங்களிலேயே சிம்பு - வெற்றிமாறன் இணையும் படத்துக்கு வானளவு எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. வடசென்னை படத்திலேயே அவர்கள் இணைவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போனது. எனவே இப்போது அவர்கள் இணையும் படம் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இப்படம் வடசென்னை யுனிவர்ஸில்தான் வரும் என்று வெற்றி கூறியிருப்பது எஸ்டிஆர் ரசிகர்களுக்கு மேற்கொண்டு திருப்தி.
கலைப்புலி தாணு பதிவு: படத்தின் ப்ரோமோ ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது. இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இவர்தான் வெற்றி - சூர்யா இணையவிருந்த வாடிவாசல் படத்தை தயாரிப்பதாக இருந்தார். அது பாதியில் கைவிடப்பட்டதால் இந்தக் கூட்டணியுடன் இணைந்திருக்கிறார். இப்படத்தின் ப்ரோமோ வீடியோ இன்று வெளியாவதாக இருந்தது. ஆனால் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. தாணு தனது எக்ஸ் பக்கத்தில், "சிம்புவின் ரசிகர்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க STR & வெற்றிமாறன் படத்தின் முன்னோட்டம் திரையரங்கிலும் சமூக வலைத்தளங்களிலும் ஒரே நேரத்தில் வெளியிடுவது ரசிகர்களின் இத்தனை நாள் பொறுமைக்கு ஈடுசெய்யும் நிகழ்வாக அமையும்.
ஆகையால் சென்சார் பணிகள் நிறைவுற்று, விரைவில் உங்கள் கண்முன்னே அந்த மாபெரும் முன்னோட்டம் வெளிவர உள்ளது. இதுவே STR-வெற்றிமாறன் கூட்டணி மீது ரசிகர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும் அன்பிற்கும் எங்களின் நன்றியை தெரிவிக்கும் சிறப்பு தருணமாகும்.இனி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்" என குறிப்பிட்டிருந்தார்.
என்ன காரணம்: இந்நிலையில் இப்பட ப்ரோமோ ரிலீஸ் தாமதத்துக்கான காரணம் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பதாக கூறப்படுகிறது. ப்ரோமோவுக்கான இசை கோர்ப்பு பணிகளை இன்னமும் அவர் முடிக்காததால்தான் இந்தத் தாமதம் நிகழ காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள்; அய்யோ வெற்றிமாறன் ஏற்கனவே ஒரு படத்தை எடுத்து முடிக்க தாமதப்படுத்துவார். இப்போது அனிருத்தும் போதாக்குறைக்கு சேர்ந்துவிட்டார். திட்டமிட்டபடி எந்த சிக்கலும் இல்லாமல் படத்தை டெலிவர் செய்துவிடுவார்களா என கேள்வியை முன்வைத்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











