சங்கத்தமிழன் விஜய் சேதுபதியுடன் இணைந்த ராக்ஸ்டார் அனிருத் - பாடல் ரிலீஸ்

சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் சங்கத்தமிழன் படத்தில் தற்போது புதிதாக இசையமைப்பாளர் அனிருத் இணைந்துள்ளார். இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைப்பில் பாடியுள்ளார் அனிருத். இவர் விஜய் சேதுபதிக்காக பாடிய பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த எங்க வீட்டு பிள்ளை, நம்நாடு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், தளபதி விஜயின் பைரவா உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ்.

Anirudh joins with Vijai Sethupathi’s Sangathamizhan

விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி அவர்கள் தயாரித்துள்ள இந்த சங்கத்தமிழன் படத்தை இயக்குனர் விஜய்சந்தர் இயக்கியுள்ளார். பி.பாரதி ரெட்டி அவர்களுக்கு இது 6 வது படமாகும்.

விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இவர்களுடன் இந்த படத்தில் நாசர், சூரி, ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமன், ஸ்ரீ ரஞ்ஜனி, மைம் கோபி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து சங்கத்தமிழன் படத்தில் விவேக் சிவா மற்றும் சஞ்சனா கல்மஞ்சே ஆகியோர் குரலில் கு.கார்த்திக் வரிகளில் வெளியான கமலா எனும் முதல் பாடல் இப்படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

மேலும் இப்படத்தில் பிரான்சிஸ் எழுதிய சண்டகாரி நீதான் என் சண்டக்கோழி நீதான் என்ற பாடலை ராக்ஸ்டார் அனிரூத் பாடியுள்ளார் . இந்த பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

சங்கத் தமிழன் படத்தின் ஒளிப்பதிவு பணியை ஆர்.வேல்ராஜும், சண்டைப் பயிற்சியை அனல் அரசுவும் மேற்கொள்கின்றனர். கலை இயக்குனராக பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். நடன இயக்குநர்களாக ராஜு சுந்தரம் மற்றும் செரிஃப் சாண்டியும், மக்கள் தொடர்பாளராக ரியாஸ்.கே.அஹமதும் கவனித்துக்கொள்கின்றனர்.

தீபாவளியன்று படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளதால் படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக படக்குவினர் தெரிவித்துள்ளனர். விஜய் நடித்த பிகில் மற்றும் கார்த்தி நடித்த கைதி படத்துடன் சங்கத் தமிழன் படமும் மோதவுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ரசிகர்களுக்கு சரவெடி தீபாவளியாகவும் இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X