அனிருத் - காவ்யா மாறன் திருமண தேதி இதுதான்.. விஷயத்தை சொன்ன பிரபலம்.. அது நடந்த பிறகுதான் எல்லாம்

சென்னை: அனிருத் மற்றும் காவ்யா மாறன் காதலித்து வருகிறார்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளார்கள், இரு வீட்டு பெரியவர்களும் திருமணத்திற்கு தயாராக உள்ளார்கள். இன்னும் வெளியே சொல்லாமல் இருக்கிறார்கள். விரைவில் தகவல்கள் வரும் என்று ஒய்.ஜி மகேந்திரன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இப்படி இருக்கையில் அவர்களின் திருமண தேதி குறித்த தகவலை வலைபேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் இருந்தே இசையமைப்பாளர் ராக் ஸ்டார் அனிருத்க்கும் ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளருமான காவ்யா மாறனுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இருவரும் காதலித்து வருகிறார்கள், ரகசியமாக வெளிநாடுகளில் அவுட்டிங் சென்று வருகிறார்கள் என்று எல்லாம் தகவல்கள் பரவியது. இப்படியான செய்திகள் வந்த போது, அனிருத்தோ தனது எக்ஸ் பக்கத்தில், கல்யாணமா? எனக்கா? என்று பதிவிட்டு அந்த பேச்சை அப்படியே ஆஃப் செய்தார்.

Anirudh-Kavya Maran Wedding Date Valai Pechu Andhanan Reveals Possible November

அவுட்டிங் போட்டோஸ்: அதன் பின்னர் இருவரும் வெளிநாட்டில் ஒன்றாக நடந்து செல்வது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியானது. இந்த புகைப்படம் இருவரும் காதலிக்கிறார்கள் என்ற சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் வழுவாக்கியது. இந்நிலையில் மூத்த நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் தெரிவித்த தகவலுக்குப் பின்னர் இருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளது உறுதியானது.

திருமண தேதி: இந்நிலையில் இருவருக்கும் வரும் நவம்பர் மாதம் திருமணம் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், அதுவும் நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் வலைபேச்சு அந்தணன் குறிப்பிட்டுள்ளார். இந்த திருமணத் தேதியை உறுதி செய்ததில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிகவும் முக்கியமான நபராக உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இதுக்கு பிறகுதான்: மேலும் திருமணத்தை நவம்பரில் நடத்துவதன் மூலம், ஜெயிலர் 2 படத்தை ரிலீஸ் செய்த பின்னர் எந்தவிதமான டென்ஷனும் இல்லாமல் திருமணத்தை நிம்மதியாக நடத்தலாம் என்று சன் குடும்பத்தாரும், சூப்பர் ஸ்டார் குடும்பத்தாரும் நினைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வலைபேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் தற்போது தீயாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X