பாடகிகளுடன் கிசுகிசுக்கப்படுவது அனிருத்துக்கு ஒன்னும் புதுசு இல்ல.. ஏற்கனவே அலற விட்ட லிப்லாக்!

சென்னை: இசையமைப்பாளர் அனிருத்துக்கும் பாடகி ஜோனிடாவுக்கும் காதல் என தகவல் பரவி வரும் நிலையில் அவர் ஏற்கனவே சிக்கிய கிசுகிசுக்களை தூசு தட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.

தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில் இளம் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத்.

தனுஷ் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

டாப் இசையமைப்பாளர்

டாப் இசையமைப்பாளர்

சினிமாத்துறைக்குள் நுழைந்த சொற்ப காலத்திலேயே அசுர வளர்ச்சி அடைந்துள்ளார் அனிருத். ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கும் இசையமைத்து டாப் இசையமைப்பாளராக அசுர வளர்ச்சி அடைந்துள்ளார்.

பாடல்களும் பாடுகிறார்

பாடல்களும் பாடுகிறார்

இவருடைய மெலோடி, துள்ளல், குத்துப்பாட்டு என இவர் அமைக்கும் இசைக்கு என பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. இசையோடு நிறுத்திக்கொள்ளாமல் பின்னணி பாடகராகவும் உள்ளார் அனிருத். அவரது குரலில் வெளியான பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பிரபலம்.

காத்திருக்கும் மாஸ்டர்

காத்திருக்கும் மாஸ்டர்

கடைசியாக அவரது இசையில் தாராள பிரபு படம் ரிலீஸானது. அவரது இசையில் உருவான மாஸ்டர் படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியான நிலையில் படம் மட்டும் ரிலீஸ்க்காக காத்திருக்கிறது. தற்போது, டாக்டர், இந்தியன் 2, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

ஜோனிடாவுடன் காதல்

ஜோனிடாவுடன் காதல்

அதோடு சிவகார்த்திகேயனின் 17 வது படத்திற்கும் விக்ரமின் 60வது படத்திற்கும் இசையமைக்க உள்ளார் அனிருத். இந்நிலையில் அனிருத் குறித்து ஒரு கிசுகிசு தீயாய் பரவி வருகிறது. அதாவது, டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லம்மா பாடலை பாடிய ஜோனிடாவுடன் காதல் என்பதுதான் அது.

லிப்லாக் போட்டோஸ்

லிப்லாக் போட்டோஸ்

ஏற்கனவே நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியாவுடன் கிசுகிசுக்கப்பட்டார் அனிருத். இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாகவும் தகவல் பரவியது. அவ்வளவு ஏன் ஆண்ட்ரியாவுக்கு அவர் கொடுத்த லிப் லாக் போட்டோக்களும் இணையத்தில் லீக்காகி அலற விட்டது.

ஏகப்பட்ட கிசுகிசுக்கள்

ஏகப்பட்ட கிசுகிசுக்கள்

அது மட்டுமின்றி சுச்சி லீக்ஸ் சர்ச்சையிலும் சிக்கினார் அனிருத். அவருடைய பல போட்டோக்களும் வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்று ஏகப்பட்ட சர்ச்சையிலும், கிசுகிசுவிலும் சிக்கியிருக்கிறார் அனிருத். அந்த போட்டோக்கள் எல்லாமே உண்மையா, மார்ஃபிங்கா என இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

Recommended Video

Anirudh Massive update on Master Release | Lokesh Kanagaraj, Thalapathy Vijay, Diya Menon
அவர்கள்தான் சொல்லனும்

அவர்கள்தான் சொல்லனும்

இந்நிலையில்தான் மீண்டும் ஒரு பாடகியுடன் காதல் என்ற தகவலை கிளப்பிவிட்டு பரப்பி வருகின்றனர். இந்த விஷயமும் வழக்கம் போல கிசுகிசு தானா அல்லது அதற்கும் மேலா என்பதை சம்பந்தப்பட்ட அனிருத்தும் ஜோனிடாவும் தான் உறுதிப்படுத்த வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X