தெலுங்கு ‘கொலைவெறி’க்கு தயாராகிறார் அனிருத்... நாயகன் ராம்சரண்!
சென்னை: இசையமைப்பாளர் அனிருத், பெயரிடப்படாத ராம்சரண் படம் மூலம் தெலுங்குப் பட உலகில் அறிமுகமாகிறார்.
தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார் அனிருத். இவர் மிகக் குறைந்த வயதில் அறிமுகமான படமான ‘3'ன் மூலமே வெற்றிப்பட இசையமைப்பாளர் ஆனார். இப்படத்தில் இவர் இசையமைத்த ‘ஒய் திஸ் கொலைவெறி' பாடல் இவரது புகழைப் பட்டித் தொட்டி எங்கும் பரவச் செய்தது.
கடந்தாண்டு இவருடைய இசையில் வெளிவந்த ‘வேலையில்லா பட்டதாரி', ‘மான் கராத்தே', ‘கத்தி' ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றியடைந்தன. தற்போது முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

தெலுங்குப் படம்...
இந்நிலையில், தற்போது தெலுங்குப் பட உலகிலும் அடியெடுத்து வைக்க இருக்கிறார் அனிருத். ராம்சரண் நடிக்கும் பெயரிடப்படாத படத்திற்கு அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
டுவிட்டரில் தகவல்...
இப்படத்தை ஸ்ரீனு வைத்லா இயக்குகிறார். இத்தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் அனிருத் தெரிவித்துள்ளார்.

சமந்தா நாயகி...
இப்படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்கிறார். சமந்தா நடிக்கும் படத்திற்கு அனிருத் இசையமைப்பது இது இரண்டாவது முறையாகும். ஏற்கெனவே, சமந்தா நடிப்பில் வெளிவந்த ‘கத்தி' படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

காக்கிச்சட்டை...
இது தவிர, அனிருத் இசையமைப்பில் தமிழில் உருவாகியுள்ள ‘காக்கிச்சட்டை' படம் இம்மாத இறுதியில் வெளியாகவிருக்கிறது.


Click it and Unblock the Notifications











