அனிருத்தின் திருமணம் எப்போது நடக்கும்?.. மணப்பெண் யார்?.. அவரோட அப்பா என்ன சொல்லிருக்காரு தெரியுமா?
சென்னை: தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார் அனிருத். ரஜினி, கமல், விஜய், அஜித் என டாப் ஹீரோக்கள் எல்லோரின் படங்களுமே அனிருத் ஸ்டூடியோவுக்கு சென்றுவிடுகின்றன. சம்பளமும் அவர் ஒரு படத்துக்கு பத்து கோடி ரூபாய் அளவில் வாங்குவதாக கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க அவரது திருமணம் எப்போது என்ற கேள்வியும் அடிக்கடி எழுந்துவருகிறது. இந்நிலையில் அவரது தந்தை இதுகுறித்து பேசியிருக்கிறார்.
ரஜினிகாந்த்தின் மைத்துனருடைய மகன் அனிருத். சிறு வயதிலிருந்தே இசையின் மீது இருந்த ஆர்வத்தை அடுத்து; 3 படத்தில் அவரை தனுஷ் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். சினிமா அவருக்கு ஒத்துவருமா என்று பெற்றோர்கள் யோசித்தபோது; அவருக்கு சினிமா மட்டும்தான் ஒத்து வரும் நம்புங்கள் என்று அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து; அனிருத்தை திரைத்துறைக்கு அழைத்து வந்தார். அனியும் தனுஷின் நம்பிக்கையை முதல் படத்திலேயே பன்மடங்கு நிரூபித்துவிட்டார்.
டாப் இசையமைப்பாளர்: 3 படத்துக்கு பிறகு அவர் இசையமைத்த ஒவ்வொரு படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் ஹிட்டடிக்க ஆரம்பித்தன. இதனால் படிப்படியாக அவர் உயர்ந்து; அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் இசையமைக்க ஆரம்பித்துவிட்டார். ரஜினி முதல் சிவகார்த்திகேயன்வரை அவரது இசை இருந்தால்தான் செட் ஆகும் என்ற மனநிலைமைக்கு வந்துவிட்டார்கள். இதன் காரணமாக அனிருத்தும் குறுகிய காலத்திலேயே டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக மாறிவிட்டார்.

விமர்சனமும் உண்டுதான்: அவரது இசை கொண்டாடப்படும் அளவுக்கு விமர்சனத்தையும் சந்திக்கிறது. ஒரே இசையை வேறு வேறு மாதிரி கொடுக்கிறார் என்ற பேச்சும், அவர் வந்த பிறகுதான் தமிழ் பாடல்களில் வரிகளின் தரம் குறைந்து; சத்தம் மட்டுமே இருக்கிறது என்றும் பலர் சொல்வார்கள். ஆனால் அவர் மீது வைக்கப்படும் விமர்சனம் தொடர்ந்துகொண்டிருந்தாலும் அவர் இசையமைக்கும் பாடல்கள் சென்சேஷனல் ஆகிவிடுவதும் குறிப்பிடத்தக்கது.
அனிருத் திருமணம்: இது ஒருபக்கம் அனிருத்துக்கு இப்போது திருமண வயது வந்துவிட்டதால் அதுபற்றிதான் பலரது பேச்சாக இருக்கிறது. ரஜினிகாந்த்கூட கூலி இசை வெளியீட்டு விழாவில் அனிருத்தான் அனைவராலும் விரும்பப்படும் சிங்கிளாக இருக்கிறார் என்று சொல்லியிருந்தார். ஆனால் தனது திருமணம் பற்றி அனிருது இதுவரை வாய் திறக்கவில்லை. அதேசமயம் தொழிலதிபர் ஒருவரின் மகளை அவர் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார் என்றும் கிசுகிசுவை கிளப்பிவிட்டார்கள்.

தந்தை பேட்டி: இந்நிலையில் அனிருத்தின் திருமணம் குறித்து அவரது தந்தை ரவி ராகவேந்திரா அளித்த பேட்டியில், "இன்று எந்த பையன் அப்பா, அம்மாவிடம் வந்து நீங்கள் பெண் பாருங்கள் என்று சொல்கிறான். சிலர் சொல்லலாம். பெற்றோரிடம் பலர் கேட்பதில்லை; சொல்கிறார்கள் அவ்வளவுதான். திருமணம் செய்துகொள்கிறேன் என்று சொல்கிறார்களே தவிர; நான் செய்துகொள்ளவா, நீங்கள் பெண் பார்க்கிறீர்களா என்றெல்லாம் கேட்பதில்லை. பார்ப்போம் அனிருத் எப்போது சொல்கிறார் என்பதை" என்றார். இந்தப் பேட்டி சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியிருக்கிறது. மேலும், ரவி சொல்வதை பார்த்தால் தனக்கு பெண் பார்க்கும் பொறுப்பை பெற்றோர்களிடம் அனிருத் விட்டுவிட்டாரோ என்று தோன்றுவதாகவும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications