Anirudh: பரோட்டா மாஸ்டராக மாறிய ராக்ஸ்டார் அனிருத்... என்னய்யா இது இப்படி பங்கம் பண்றீங்க..?
சென்னை: இசையமைப்பாளர் அனிருத் தற்போது படுபிஸியாக வலம் வருகிறார்.
முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், ஷாருக்கான், என்.டி.ஆர் ஆகியோரின் படங்களுக்கு ஒரே நேரத்தில் இசையமைத்து வருகிறார்.
இதனால் தூங்க கூட நேரமில்லாமல் இரவும் பகலும் ஸ்டுடியோவிலேயே இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், ராக்ஸ்டார் அனிருத்தை பரோட்டா மாஸ்டராக மாற்றி பங்கம் செய்துள்ளனர் நெட்டிசன்கள்.

அனிருத்தை பங்கம் செய்த நெட்டிசன்கள்: தனுஷின் 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். 'ஒய் திஸ் கொலைவெறி' என்ற ஒரே பாடலில் உலகம் முழுக்க பாப்புலரான அனிருத், இப்போது கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வருகிறார். ஆரம்ப காலங்களில் தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வந்தார்.
ஆனால், குறுகிய காலத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினி, தளபதி விஜய், அல்டிமேட் ஸ்டார் அஜித் போன்ற டாப் ஹீரோக்களின் ஃபேவரைட் இசையமைப்பாளராக மாறிவிட்டார். மெலடி, குத்துப் பாடல், மாஸ் சாங்ஸ், வெரைட்டியான பிஜிஎம் என 2கே கிட்ஸின் பல்ஸ் பிடித்து இசையமைத்து வருகிறார் அனிருத். இதனால், அவர் இசையமைக்கும் படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.
குறிப்பாக கடந்தாண்டு வெளியான விக்ரம் படத்தில் அனிருத்தின் பிஜிஎம் வேற லெவலில் தெறிக்கவிட்டது. இந்நிலையில் தற்போது ஜெயிலர், இந்தியன் 2, லியோ, ஜவான் ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மேலும், தலைவர் 170, விடாமுயற்சி, தெலுங்கில் ஜூனியர் NTR படம் என கைவசம் இன்னும் பல படங்கள் உள்ளன. இதனால் 24 மணி நேரமும் பிஸி மோடில் காணப்படுகிறார்.
விரைவில் ஜெயிலர், ஜவான், இந்தியன் 2 படங்களின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஜெயிலர், ஜவான், லியோ படங்களின் டீசரும் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதனையடுத்து அனிருத்தை ட்ரோல் செய்யும் விதமாக நெட்டிசன்கள் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளனர். பிரபல யூடியூபர்களான கோபியும் சுதாகரும் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தனர்.
அதில், ஹோட்டலில் வேலை பார்க்கும் பரோட்டா மாஸ்டர் ஒரே நேரத்தில் எப்படி பல வேலைகள் செய்வார் என இமிட்டேட் செய்திருந்தனர். அதாவது, பரோட்டா போட்டுக் கொண்டிருக்கும் போதே ஆம்ளேட் ஆர்டர் எடுப்பது, அப்படியே ஃப்ரைடு ரைஸ் போடுவது என பரோட்டா மாஸ்டர் எப்படி வெரைட்டியாக வேலை பார்க்கிறார் என்பதைபோல் நடித்திருந்தனர்.
அந்த வீடியோவில் ஜெயிலர், ஜவான், லியோ படங்களுக்கு அனிருத் எப்படி ஒரே நேரத்தில் மியூசிக் கம்போஸ் செய்கிறார் என ரீ-எடிட் செய்து ஷேர் செய்துள்ளனர். அதில், எல்லா படங்களுக்கும் ஒரேமாதிரியாக தான் அனிருத் இசையமைப்பார் என்பதை அவரது பிஜிஎம் இசைகளை பின்னணியில் ஒலிக்கவிட்டு கலாய்த்துள்ளனர். அனிருத்தின் இசை ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றாலும், அவரது பாடல்களும் இசையும் ஒரேமாதிரி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











