Anirudh On Vijay: விஜய் கொடுத்த சூப்பர் கிஃப்ட்... அனிருத்தின் சீக்ரெட் ஆஃப் சக்சஸ் இதுதானா..?
சென்னை: கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக அனிருத் மாஸ் காட்டி வருகிறார்.
ஒரே நேரத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித் என மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், லியோ ஆடியோ லான்ச் கேன்சல் ஆனதற்கு அனிருத்தும் காரணம் என தகவல்கள் வெளியாகின.
ஆனால், அனிருத்தின் சமீபத்திய பேட்டியில் விஜய் பற்றி நெகிழ்ச்சியாக பேசியது, அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

அனிருத்தின் வெற்றிக்குப் பின்னால் விஜய்: தனுஷின் 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், 'ஒய் திஸ் கொலைவெறி' என்ற ஒரே பாடலில் உலகம் முழுவதும் பிரபலமானார். குறுகிய காலத்தில் கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத், ஒரேநேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல், அஜித், தளபதி விஜய் என டாப் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
ஜெயிலரை தொடர்ந்து ரஜினியின் தலைவர் 170, தலைவர் 171 படங்களுக்கும் அனிருத் தான் இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே விஜய்யின் லியோ படத்துக்கான பின்னணி இசையமைக்கும் வேலைகளில் அனிருத் பிஸியாக இருக்கிறாராம். இந்தப் படத்தில் இருந்து நான் ரெடி, BaDass என இரண்டு பாடல்கள் அனிருத் இசையில் வெளியாகிவிட்டன.
அதேநேரம் லியோ ஆடியோ லான்ச் கேன்சலாக அனிருத்தும் ஒரு காரணம் என தகவல்கள் வெளியாகின. அதாவது இசை வெளியீட்டு விழாவில் லைவ் பெர்ஃபாமன்ஸ் செய்ய அனிருத் மறுத்துவிட்டதாகவும், அதனால் தான் லியோ ஆடியோ லான்ச் கேன்சலானதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த சர்ச்சை குறித்து அனிருத் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் வெளியாகவில்லை. ஆனால், அவரது சமீபத்திய பேட்டியில் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அனிருத்.
விஜய்யுடன் அனிருத் முதன்முதலில் இணைந்தது 'கத்தி' படத்தில் தான். ஏஆர் முருகதாஸ் இயக்கிய இந்தப் படம் 2014ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. கத்தி படத்தின் பாடல்கள், பிஜிஎம் ரசிகர்களிடம் செம்மையாக ரீச் ஆகின. இதனால் அனிருத்துக்கு சூப்பரான கிஃப்ட் கொடுத்துள்ளார் விஜய். இதுபற்றி பேசிய அனிருத், கத்தி படத்திற்காக சூப்பரான பியானோ ஒன்றை விஜய் சார் தனக்கு கிஃப்ட்டாக கொடுத்தார் எனக் கூறியுள்ளார்.
மேலும், சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளராக இருந்த அந்தத் தருணத்தில், விஜய்ண்ணா கொடுத்த அந்த பியானோ எனக்கு மிகப் பெரிய சர்ப்ரைஸ்ஸாக அமைந்தது என்றும் அனிருத் மனம் திறந்துள்ளார். அதேபோல், இயக்குநர்களுக்கு நான் கொடுக்கும் ட்யூன்களை இந்த பியானோவில் தான் கம்போஸ் செய்வேன் என்றும், அப்போது வேறெந்த இசைக் கருவிகளையும் பயன்படுத்தமாட்டேன் என அனிருத் ஓபனாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











