Jana Nayagan: ஜன நாயகன் ஆடியோ லான்ச் எப்படி இருக்கும்.. அனிருத் கொடுத்த சூப்பரான அப்டேட்!
சென்னை: தளபதி விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்தின் ரீ ரெகார்டிங் பணிகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன், இந்த மாதம் இறுதியில் மலேசியாவில் நடைபெற உள்ள ஜன நாயகன் இசை வெளியிட்டு விழா தெறியாக இருக்கும் என அனிருத் பேசியுள்ளார்.
அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் படங்களில் சிறுவனாக நடிக்கத் தொடங்கிய விஜய் நாளைய தீர்ப்பு படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அவரது 69வது படமாகவும் கடைசி படமாகவும் ஜன நாயகன் வெளியாக உள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி பொங்கலுக்கு ஜன நாயகன் படம் வெளியாகவுள்ள நிலையில், வரும் டிசம்பர் 27ம் தேதி மலேசியாவில் உள்ள ஓபன் ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழா மற்றும் தளபதி கச்சேரி நடைபெறவுள்ளது.
ரொம்ப சோகமா இருக்கு: விஜய் சாரோட ஜன நாயகன் படத்தின் ஆர் ஆர் ஒர்க் பண்ணிட்டு இருக்கேன். கொஞ்சம் சோகமாகவும் இருக்கு, விஜய் சாரோட கடைசி படம் இது என்பதால், ஆனால், கண்டிப்பாக இசை வெளியீட்டு விழா மலேசியாவில் தெறியாக இருக்கும். ஓபன் ஸ்டேடியத்தில் ஜன நாயகன் பாடல்களை மட்டுமின்றி விஜய்யுடன் நான் பணியாற்றிய கத்தி, மாஸ்டர், லியோ, பீஸ்ட் என அனைத்து பட பாடல்களையும் ட்ரிப்யூட்டாக பாடப் போகிறேன் என அனிருத் கூறியுள்ளார்.
தெறிக்க விடுறோம்: மலேசியாவில் பொதுவாக கான்செர்ட் நடந்தாலே தெறிக்கும், இது தளபதியின் லாஸ்ட் ஆடியோ லான்ச் வேற சொல்லவே தேவையில்லை. ஓபன் ஸ்டேடியம், ஏகப்பட்ட கிரவுட், ஆடியோ லான்ச் சும்மா தெறிக்க விடுறோம் என அனிருத் தனது சந்தோஷத்தையும் பகிர்ந்துக் கொண்டார்.
ரசிகர்கள் வெயிட்டிங்: நடிகராக விஜய்யின் கடைசி படம் மற்றும் கடைசி இசை வெளியீட்டு விழா என்பதால் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். கண்டிப்பாக ஆடியோ லான்ச் முடியும் போது ஆயிரக் கணக்கான ரசிகர்களின் கண்கள் எல்லாம் கண்டிப்பாக குளமாகிவிடும் என்பது உறுதி என ரசிகர்கள் கூறுகின்றனர். அரசன் படத்தின் படப்பிடிப்பு இப்போதுதான் ஆரம்பித்துள்ளது. அது முடிய இன்னும் ஒரு வருஷம் ஆகிவிடும் என்று அந்த படத்தின் அப்டேட்டையும் அனிருத் கொடுத்துள்ளார். சிம்பு ரசிகர்கள் 2027ம் ஆண்டு வரை அரசன் வருகைக்காக காத்திருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











