வெளிநாட்டில் அனிருத் காவ்யா மாறன் திருமணம்? தேதி குறிச்சாச்சுனு தகவல் வருதே பாஸ்
சென்னை: இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரும் தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் இசையமைப்பாளராக வலம் வருபவருமான அனிருத்தும், ஐபிஎல் தொடரில் விளையாடும் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளருமான காவ்யா மாறனும் காதலித்து வருகிறார்கள் என்று ஏற்கனவே கிசுகிசுக்கள் உலா வந்தது. இப்படி இருக்கையில், விரைவில் அவர்கள் இருவருக்கும் திருமணம் என்றும், அது இந்தியாவில் இல்லாமல் வெளிநாட்டில் நடைபெற உள்ளது என்றும் கூறப்படுகிறது.
ராக் ஸ்டார் அனிருத் தென்னிந்திய சினிமா இசையில் ஒரு புயலாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இவரது இசையில் ஆண்டுக்கு இரண்டு முதல் மூன்று படங்கள் வெளியானாலும் அவை அனைத்தும் இசைக்காக பெருமளவு பாராட்டப்படுகிறது. கடைசியாக வெளியான லவ் இன்சூரன்ஸ் கொம்பனி படத்தின் கதை, திரைக்கதையில் ரசிகர்கள் தொடங்கி விமர்சகர்கள் வரை அனைவருக்கும் கலவையான விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால் படத்தை மொத்தமாக எலிவேட் செய்தது அனிருத்தின் இசை தான் என்று பலரும் பாராட்டினர்.
இப்படி இருக்கையில் அனிருத் காதலில் இருக்கிறார், அதுவும் பெரிய இடத்துப் பெண் என்று கிசுகிசுக்கள் முதலில் பரவியது. அதை அடுத்து அனிருத்தின் காதலி வேறு யாரும் இல்லை, அது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான கலாநிதி மாறனின் மகளும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளருமான காவ்யா மாறன் தான் என்றும் கிசுகிசுக்கள் பரவியது.

ம்றுப்பு தெரிவித்த அனிருத்: இது தொடர்பாக அனிருத் தனது எக்ஸ் பக்கத்தில் முன்னதாக, கல்யாணமா? லொள்ளு, சில்லா இருங்க மக்களே, வதந்திகளைப் பரப்பாதீங்க" என்று பதிவிட்டிருந்தார். அனிருத்தின் இந்த போஸ்ட்ட்க்குப் பின்னர் இது தொடர்பான பேச்சுக்கள் பரவவில்லை. ஆனால் தற்போது மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. அதாவது, இவர்களின் திருமணம் குறித்து இரு வீட்டாரும் பேசி தேதி குறித்து விட்டதாகவும், இந்த ஆண்டில் வரும் நவம்பர் மாதம் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்றும், அதற்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டது என்றும் கூறப்படுகிறது.
ஸ்பெயின்னில் திருமணம்: மேலும் திருமணத்தை இங்கு வைக்காமல் ஸ்பெயினில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், வரவேற்பு நிகழ்ச்சி மட்டும் சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இப்படியான தகவல்கள் இணையத்திலும் திரையுலகிலும் பரவலாக பேசப்பட்டு வந்தாலும், இருவர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications