ஜாலியோ ஜிம்கானாவும் காப்பியா?... அட போங்கப்பா… இதே வேலையா போச்சு !

சென்னை : பீஸ்ட் திரைப்படத்தின் ஜாலியோ ஜிம்கானா பாடலும் காப்பி என நெட்டிசன்கள் தாறுமாறாக கிண்டலடித்து வருகின்றனர்.

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் பீஸ்ட்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

பீஸ்ட்

பீஸ்ட்

பீஸ்ட் திரைப்படத்திலிருந்து கடந்த மாதம் அரபிக் குத்து பாடல் வெளியானது. பாடல் இதுவரை 150 மில்லியன் பார்வைகளுக்கு மேல் சென்றடைந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இப்போது இரண்டாவது பாடல் அப்டேட்டையும் படக்குழு வெளியிட்டுள்ளது. ஜாலியோ ஜிம்கானா எனத் தொடங்கும் அந்தப் பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார்.

மார்ச் 19ல் இரண்டாவது சிங்கிள்

மார்ச் 19ல் இரண்டாவது சிங்கிள்

மார்ச் 19-ல் வெளியாகும் அந்தப் பாடலின் ப்ரோமோ வீடியோவையும் சன் பிக்சர்ஸ் நேற்று வெளியிட்டுள்ளது. அந்த ப்ரோமோவில், விஜய், அனிருத், நெல்சன், பூஜா ஹெக்டே என ஜாலியோ ஜிம்கானா பாடலை பாடி ஆட்டம் போட்டுள்ளார். இந்த ப்ரோமோ வெளியான சிறிது நேரத்திலேயே இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி விட்டது.

இதுவும் காப்பியா ?

இதுவும் காப்பியா ?

இந்த ப்ரோமோ ஒருபக்கம் வைரலாகிக் கொண்டு இருக்க, இந்த மியூசிக்கை எங்கையோ கேட்டமாதிரி இருக்கே என்று நெட்டிசன்கள் இணையத்தில் தேடத் தொடங்க கடைசியில், இது சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வரும் பீலா பீலா பாடலை போன்றே ஜாலியோ ஜிம்கானா பாடல் இருக்கிறது என்றும், என்ன அனிருத் சார் இதுவும் காப்பியா? இதே வேலையா போச்சு என்று ரசிகர்கள் சிலர் விமர்சித்து வருகின்றனர்.

இனி அவ்வளவு தான் அனிருத்

இனி அவ்வளவு தான் அனிருத்

அதேபோல, அரபிக்குத்து பாடல் வெளியான போதும், தீவான ஹூன் என்ற பாடலை அட்டக்காப்பி அடித்துதான், அரபிக்குத்து பாடல் உருவாகியதை நெட்டிசன்கள் கண்டுபிடித்து அனிருத்தை வெச்சு செய்தனர். தற்போது ஜாலியோ ஜிம்கானா காப்பி லிஸ்டில் சேர்ந்துள்ளது. இனி இணையத்தில் அனிருத்தின் மண்டைதான் உருளப் போகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X