Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ஒய் திஸ் கொலவெறி மூலம் ஓவர் நைட்டில் பிரபலம் ஆக்கிட்டீங்க.. 10 வருட ரீலை போட்டு அசத்திய அனிருத்!
சென்னை: அனிருத்தின் முதல் பாடல் வெளியாகி 10 ஆண்டுகள் ஆவதாகவும் 10 ஆண்டுகளில் தான் இசைத்த படங்களின் தொகுப்பையும் ஒரு ரீல் வீடியோவாக போட்டு ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார் ராக்ஸ்டார் அனிருத்.
ஒய் திஸ் கொலவேறி பாடல் மூலம் உலகையே திரும்பி பார்க்க வைத்த அனிருத் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக என்ன என்ன படங்களுக்கு இசையமைத்தேன் என்றும் தற்போது என்ன என்ன படங்களுக்கு இசையமைத்து வருகிறேன் என்பது குறித்தும் அனிருத் இந்த வீடியோவில் தெளிவாக பதிவு செய்துள்ளார்.
8 ஆண்டுகளை கடந்த அஜித்தின் அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் ஆரம்பம்!

10 ஆண்டுகளை கடந்த அனிருத்
இசையமைப்பாளராக திரைத்துறைக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன என ராக்ஸ்டார் அனிருத் சூப்பரான வீடியோவை பதிவிட்டு தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அந்த ரீலில் இந்த 10 ஆண்டுகளில் அவர் இசையமைத்த பல சூப்பர் ஹிட் படங்கள் இடம்பெற்றுள்ளன.

30 வயசுக்குள்ள
ஒரு 30 வயசுக்குள்ள பெரிய இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்கிற கனவோடு தான் இந்த துறைக்கு வந்தேன். ஆனால், என்னுடைய முதல் பாடலான ஒய் திஸ் கொலவெறி பாடல் மூலம் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே என்னை பிரபலமாக மாற்றிவிட்டீர்கள் உங்க அன்புக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.

எல்லாமே வேற லெவல்
தனுஷின் 3 திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமான அனிருத் சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல், காக்கி சட்டை, ரெமோ தனுஷின் வேலையில்லா பட்டதாரி, மாரி, விஜய்யின் கத்தி, மாஸ்டர், பீஸ்ட் அஜித்தின் வேதாளம், விவேகம், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், ரஜினிகாந்தின் பேட்ட, தர்பார், கமல்ஹாசனின் விக்ரம், இந்தியன் 2 விஜய்சேதுபதியின் நானும் ரவுடி தான், காத்துவாக்குல ரெண்டு காதல் என எல்லாமே வேற லெவல் படங்களில் வொர்க் செய்து அசத்தி உள்ளார்.
Today marks a decade of our first song release❤️
— Anirudh Ravichander (anirudhofficial) November 16, 2021
Today marks 10 years of your abundant love towards us ❤️
Today is #10YearsofAnirudh
Love you all and here’s to the next 10 ❤️ pic.twitter.com/IkerWE45cr
ரசிகர்களுக்கு நன்றி
கடந்த 10 ஆண்டுகளாக தனக்கு இந்த அளவுக்கு ஆதரவு அளித்த திரைத்துறைக்கும் ரசிகர்களுக்கும் நன்றி கூறிய ராக்ஸ்டார் அனிருத் அடுத்த 10 வருடத்தை ஆரம்பிக்க உங்களின் ஆதரவை கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். அனிருத் 10 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்த நிலையில், அவரது ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.