இனிமே இதுதான் டிரெண்டிங்.. ரஜினிகாந்த் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்ட அனிருத்!

சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள் நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு தலைவர் பர்த்டே காமன் டிபியை ராக்ஸ்டார் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கபாலி, காலா மற்றும் பேட்ட படங்களில் உள்ள ரஜினியின் புகைப்படங்களை கொண்டு வெறித்தனமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த காமன் டிபியை ரஜினி ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

காமன் டிபி

கபாலி, காலா மற்றும் பேட்ட படங்களில் உள்ள ரஜினியின் புகைப்படங்களை கொண்டு வெறித்தனமாக உருவாக்கப்பட்டுள்ள தலைவர் பர்த்டே காமன் டிபியை தற்போது ராக்ஸ்டார் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரஜினி ரசிகர்கள், தங்களின் வாட்ஸப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள டிபியாக அந்த புகைப்படத்தை மாற்றி வருகின்றனர்.

திருவண்ணாமலை தீபம்

கார்த்திகை தீப திருநாளான இன்று ரஜினியின் பிறந்தநாள் காமன் டிபி வெளியாகியுள்ளது. இதனை குறிக்கும் விதமாக இந்த ரசிகர், கே.ஜி.எஃப் படத்தின் ஸ்டில்லை போட்டு, எல்லாரும் ஆறு மணிக்கு திருவண்ணாமலை தீபம் பார்க்க காத்துகிட்டு இருந்தாங்க ஆனா நாங்க மட்டும் தலைவர் காமன் டிபிக்காக காத்து கிட்டு இருந்தோம் என பதிவிட்டுள்ளார்.

ரூட்டே தனி

ரூட்டே தனி

தலைவா எப்பவுமே உன் ரூட்டே தனி.. தமிழக அரசியலில் உங்க ஆட்டம் தான் இனி என மதுரை மாவட்ட ஆன்லைன் ரஜினி வெறியர்கள் ஒட்டியுள்ள போஸ்டரை போட்டு இந்த நெட்டிசன் கமெண்ட் செய்துள்ளார்.

ஆள வா தலைவா

40 ஆண்டுகள், 4 தலைமுறைகள், பல மில்லியன் பேருக்கு இன்ஸ்பிரேஷன்.. ஆளவா தலைவா என தலைவர் பர்த்டே காமன் டிபியை ரீட்வீட் செய்துள்ளார் இந்த தீவிர ரஜினி ரசிகர்.

3 நாளைக்கு எல்லார் மூஞ்சும் ரஜினிதான்

3 நாளைக்கு எல்லார் மூஞ்சும் ரஜினிதான்

ரஜினி ரசிகர்களின் அனைத்து டிபிக்களும் இன்னும் மூன்று நாளைக்கு ரஜினி முகங்களாகத்தான் இருக்கும் என எந்திரன் படத்தில் ரஜினியின் ரோபோ பட புகைப்படத்தை போட்டு இந்த ரசிகர் ட்வீட் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X