திருமணத்துக்கு எந்த மாதிரி பெண் வேண்டும் அனிருத்?.. அவர் சொன்ன பதிலை பாருங்க.. செம புத்திசாலிதான்

சென்னை: ரஜினிகாந்த்தின் உறவினரும் இசையமைப்பாளருமான அனிருத் இந்திய அளவில் ஃபேமஸ் ஆனவர். பல படங்களுக்கு இசையமைத்துவரும் அவர்; இப்போதுவரை சிங்கிளாகத்தான் இருக்கிறார். அதேசமயம் அவருக்கும், சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன் காவ்யா மாறனுக்கும் திருமணம் நடக்கவிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் ஒரு பேட்டியில் பேசிய அனி; தனக்கு எப்படிப்பட்ட பெண் வேண்டும் என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கிறார்.

ரஜினிகாந்த்தின் உறவினரான அனித்தை ரொம்பவே சின்ன வயதிலேயே சினிமாவுக்குள் கொண்டு வந்துவிட்டார் தனுஷ். ஐஸ்வர்யா இயக்கியிருந்த 3 திரைப்படம்தான் அவருக்கு முதல் படம். அது ஃப்ளாப் ஆனாலும்; அனிருத்தின் பின்னணி இசையும் பாடல்களும் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தன. அதிலும், ஒய் திஸ் கொலவெறி டி பாடல் ட்ரெண்ட் செட்டராகவே மாறியது. ஓவர் நைட்டில் உலகம் முழுவதும் அவரை புகழடையவும் செய்தது என்பது நினைவுகூரத்தக்கது. அப்போதிருந்து முன்னணி இசையமைப்பாளராக மாறிவிட்டார்.

Anirudh Ravichander Reveals His Ideal Life Partner Amid Kavya Maran Marriage Rumours
Photo Credit:

அனி ஸ்டூடியோவில்தான் எல்லோரும்: இப்போது பெரிய ஹீரோக்கள் படங்கள் என்றாலே அனிருத்தை நோக்கித்தான் செல்கிறார்கள். அவரிடம் கால்ஷீட் கிடைக்காதபட்சத்தில் சாயிடம் செல்கிறார்கள். விஜய்யின் நடிப்பில் வெளியான ஜனநாயகன் படத்துக்கும் அனிருத்தான் இசை. அடுத்ததாக ரஜினிகாந்த்தின் ஜெயிலர் 2, தர்மன் என பல பெரிய படங்களுக்கு இசையமைத்துவருகிறார்.

Also Read
Jana Nayagan Box Office Day 1 - ஜனநாயகன் முதல் நாள் வசூல் என்ன தெரியுமா?.. விஜய் கன்ட்ரோலில் பாக்ஸ் ஆஃபிஸ்
Jana Nayagan Box Office Day 1 - ஜனநாயகன் முதல் நாள் வசூல் என்ன தெரியுமா?.. விஜய் கன்ட்ரோலில் பாக்ஸ் ஆஃபிஸ்

சிங்கிள் அனிருத்: இதற்கிடையே அனிருத்தின் பெர்சனல் வாழ்க்கையை பொறுத்தவரை முதலில் ஆண்ட்ரியாவை காதலித்தார். அவர்கள் இரண்டு பேரும் தீவிரமாக காதலித்து பிறகு பிரிந்துவிட்டார்கள். அவர்கள் ரிலேஷன்ஷிப்பில் இருந்தபோது முத்தம் கொடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி பெரிய சர்ச்சையை கிளப்பின. பிறகு பாடகி ஜோனிட்டா காந்தியுடன் அனி கிசுகிசுக்கப்பட்டார். அதுவும் அடங்கியது. இப்போது கடந்த் சில மாதங்களாகவே புதிய தகவல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

Recommended For You
'காகங்கள்' படப்பிடிப்பு நிறைவு - யோகி பாபுவின் பிறந்தநாள்.. கேக் வெட்டி மகிழ்ச்சி கொண்டாட்டம்
'காகங்கள்' படப்பிடிப்பு நிறைவு - யோகி பாபுவின் பிறந்தநாள்.. கேக் வெட்டி மகிழ்ச்சி கொண்டாட்டம்

காவ்யாவுடன் திருமணம்?: அதாவது தொழிலதிபரும், தயாரிப்பாளருமான சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனும், அனிருத்தும் தீவிரமாக காதலிக்கிறார்கள் என்றும்; விரைவில் அவர்கள் திருமணம் நடக்கும் என்றும் தொடர்ந்து பேச்சுக்கள் ஓடின. ஆனால் சம்பந்தப்பட்ட இரண்டு பேருமே அதுகுறித்து பொதுவெளியில் வாய் திறக்கவில்லை. மாறாக, அனிருத்தின் உறவினரும், நடிகருமான ஒய்.ஜி. மகேந்திரன் ஒரு பேட்டியில் இந்த விஷயத்தை போட்டு உடைத்துவிட்டார்.

ட்ரெண்டாகும் பேட்டி: மகேந்திரனே அப்படி சொல்லிவிட்டதால் அனிருத் - காவ்யா திருமணம் உறுதி என்றே கருதப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அனிருத்தின் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. தனியார் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியின்போது அவரிடம், 'ஜீன்ஸ் படத்தில் வரும் மதுமிதா மாதிரி பெண் வேண்டுமா இல்லை வைஷாலி மாதிரி பெண் வேண்டுமா?' என ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தை காட்டி கேட்கப்பட்டது.

அதற்கு அவரோ, ஐஸ்வர்யா ராய் என்று பதிலளித்தார். இதை பார்த்த ரசிகர்களோ அனிருத் செம புத்திசாலி ப்பா; அழகாகவும், திறமையாகவும் பெண் வேண்டும் என்பதை எவ்வளவு நாசூக்காக சொல்லியிருக்கிறார்; காவ்யாவுக்கும் அது இருக்கத்தானே செய்கிறது என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

Read more about: anirudh அனிருத்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X