பத்தல பத்தல மட்டுமில்ல.. விக்ரம் படத்தில் இத்தனை பாடல்கள் இருக்கா? தெறிக்கும் டிராக் லிஸ்ட் இதோ!
சென்னை: கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் டிராக் லிஸ்ட்டை இசையமைப்பாளர் அனிருத் தற்போது வெளியிட்டுள்ளார்.
விக்ரம் படத்தின் பிரம்மாண்ட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
மாலை 7 மணிக்கு விக்ரம் படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளியாக உள்ள நிலையில், தற்போது படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் குறித்த மொத்த டிராக் லிஸ்ட்டை அனிருத் வெளியிட்டுள்ளார்.

இசை மற்றும் டிரைலர்
கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். பிரம்மாண்ட அரங்கத்தின் புகைப்படங்களும் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன.

அனிருத் அப்பா, அம்மா
விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நாயகனே அனிருத் தான். இந்நிலையில், அனிருத்தின் அப்பா ரவிச்சந்தர் மற்றும் அனிருத்தின் அம்மா என இருவருமே நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டின் இசை டானாக மாறி உள்ள அனிருத் தொட்டதெல்லாம் ஹிட்டாகும் என்பது போல தொடர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் வெளியான 'பத்தல பத்தல' பாடல்களும் பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டடித்துள்ளது.

டிராக் லிஸ்ட்
இந்நிலையில், விக்ரம் படத்தின் டிராக் லிஸ்ட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ராக்ஸ்டார் அனிருத். ஃபர்ஸ்ட் சிங்கிளான பத்தல பத்தல பாடலை கமல் எழுதி பாடியுள்ளார். விக்ரம் எனும் டைட்டில் டிராக்கை விஷ்ணு எடவன் என்பவர் எழுதி உள்ளார் அந்த பாடலை அனிருத் பாடியுள்ளார். வேஸ்டட் எனும் மற்றொரு பாடலை ஹெய்ஸன்பெர்க் என்பவர் எழுதி அனிருத் பாடியுள்ளார். மேலும், போர்கொண்ட சிங்கம் மற்றும் ஒன்ஸ் அப்பான் எ டைம் என மொத்தம் 5 பாடல்கள் இந்த டிராக் லிஸ்ட்டில் உள்ளன.

டிரைலர் மிரட்டப் போகுது
இன்று மாலை 7 மணிக்கு விக்ரம் படத்தின் டிரைலர் வெளியாகி ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் மிரட்டப் போகுது என ஹை ஆக்டேன் எதிர்பார்ப்புடன் கமல் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். விக்ரம் டிரைலரில் ஒரே ஒரு சின்ன ஷாட்டிலாவது சூர்யாவை காட்டி விடுங்க மற்றதை நாங்க பார்த்துக்குறோம் என சூர்யா ரசிகர்களும் எதிர்பார்ப்புகளை எகிற விட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











