அனிருத் என்னோட படத்திற்கு இசையமைக்க முடியாது என்றார் !
சென்னை : குட்டி புலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குநர் முத்தையா
மண் மனம் சார்ந்த கிராமத்து கதைகளை தொடர்ந்து இயக்கி வரும் இவர் கொம்பன் படத்தை தொடர்ந்து மீண்டும் கார்த்தியுடன் கூட்டணி அமைத்து விருமன் என்ற படத்தை இயக்கி வருகிறார்
இந்த நிலையில் தன்னுடைய படத்திற்கு அனிருத் இசையமைக்க மறுத்துவிட்டதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கொம்பன்
கிராமத்து மண் வாசனையுடன் முரட்டுத்தனமான படங்களை இயக்கி வருகிறார் இயக்குனர் முத்தையா. சசிகுமாரின் குட்டி புலி மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான முத்தையாவுக்கு குட்டி புலி வெற்றிப் படமாக அமைந்தது. அதை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான கொம்பன் என்ற மெகா ஹிட் வெற்றி படத்தை இயக்கினார். கார்த்தி, லட்சுமி மேனன் இணைந்து நடித்த இந்த படத்தில் ராஜ்கிரண் முக்கியமான ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்து இருப்பார்.

பெண்களை மரியாதையான கதாபாத்திரங்களில்
மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையே உள்ள அழுத்தமான உறவை இதுவரை எந்த ஒரு இயக்குனரும் சொல்லாத கோணத்தில் கூறியிருந்த கொம்பன் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதை தொடர்ந்து மருது,கொடிவீரன், புலிகுத்தி பாண்டி என தொடர்ந்து கிராமத்து கதை களத்தில் பெண்களை ஆபாசம் இல்லாமல் மரியாதையான கதாபாத்திரங்களில் வீரமிக்க பெண்களாகவும் ஒவ்வொரு படங்களிலும் காட்டி வருகிறார். அடுத்ததாக மீண்டும் கார்த்தி ஹீரோவாக நடிக்கும் விருமன் என்ற படத்தை இயக்கி வருகிறார்

இரண்டாவது முறையாக கூட்டணி
கார்த்தி முத்தையாவின் காம்போவில் வெளியான கொம்பன் அமோக வெற்றிபெற்ற நிலையில் இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள படத்திற்கு விருமன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த முறையும் கிராமத்து கதையை கையில் எடுத்திருக்கும் முத்தையா பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக அறிமுகம் செய்கிறார்.

ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக
விருமன் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. சூர்யா, ஜோதிகா இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றனர் . யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கையில் புலிக்குத்தியுடன் கார்த்தி இருக்கின்ற விருமன் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியாகி இணைய தளத்தை தெறிக்க விட்டது.

அனிருத் இசையமைக்க முடியாது என்றார்
அடுத்ததாக சூர்யா ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை இயக்க இருக்கும் முத்தையா தனது இயக்கத்தில் வெளியான கொம்பன் படத்திற்கு அனிருத் இசையமைக்க மறுத்துவிட்டதாக கூறியுள்ளார். ஒவ்வொரு படங்களிலும் புதுப்புது இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றி வரும் முத்தையா கொம்பன் படத்திற்கு இசையமைக்க அனிருத்தை அணுகியுள்ளார். கொம்பன் ஒரு கிராமத்து கதை களத்தை கொண்ட படமாக இருப்பதால் அதில் தனக்கு அந்த அளவுக்கு அனுபவம் இல்லை எனவே அப்படத்திற்கு இசையமைக்க முடியாது என அனிருத் மறுத்துவிட்டதாக நேர்காணல் ஒன்றில் முத்தையா இந்த தகவலை பகிர்ந்துள்ளார். அதன்பிறகு ஜிவி பிரகாஷ் குமார் கொம்பன் படத்திற்கு இசையமைத்து படமும் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications











