Simbu & Anirudh: சிம்பு பேரைக் கேட்டதும் தெறித்து ஓடும் அனிருத்? தனுஷ்னு சொன்னா மட்டும் இனிக்குதா?

சென்னை: அனிருத் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் இசை அமைப்பாளராக உள்ளார். இவரது இசையில் ஒரு படம் வெளியாகிறது என்றாலே படத்தில் கதை இருக்கிறதோ இல்லையோ, இசை தரமாக இருக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது. இப்படியான நிலையில் சிம்பு படத்திற்கு இசையமைக்க அனிருத்திடம் கேட்டதற்கு அவர் நோ எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக இந்த தொகுப்பில் காணலாம்.

சிம்பு தமிழ் சினிமாவில் தனது குழந்தை பருவத்தில் இருந்தே நடித்து வருகிறார். குழந்தை பருவத்தில் இருந்தே சினிமாவில் இருப்பதாலோ என்னவோ, நடிப்பு, இயக்கம், இசை, நடனம், பாடல்கள் எழுதுவது, பாடல்கள் பாடுவது என ஒரு கம்ப்ளீட் சினிமாகாரராக உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை சிம்பு என்றால், படப்பிடிப்பு தளத்திற்கு குறித்த நேரத்திற்கு வரமாட்டார் என்றெல்லாம் குற்றசாட்டுகள் வைக்கப்பட்டது. ஆனால் இப்போது சிம்பு தான் கமிட் ஆன படங்களில் முறையாக நடித்துக் கொடுக்கிறார் என்ற பேச்சு வர தொடங்கியுள்ளது.

Anirudh STR Simbu Dhanush

இப்படியான நிலையில் கடந்த 3ஆம் தேதி, சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு மூன்று படங்களின் அறிவிப்புகள் வந்தது. இது மட்டும் இல்லாமல், சிம்பு நடித்து அடுத்து வெளிவர உள்ள தக் லைஃப் படத்தின் அப்டேட்டும் வெளியானது. இப்படி இருக்கும்போது, பிறந்த நாளில் வெளியான படங்கள் என்றால், சிம்புவின் 49 வது படம், 50 வது படம் மற்றும் 51 வது படம் ஆகும்.

சிம்பு: இந்த மூன்று படங்களில் 50 வது படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 49 வது மற்றும் 51 வது படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார் என்ற அறிவிப்பும் உடன் வந்தது. இதில் 49 வது படம் மற்றும் 51 வது படத்தில் இசையமைக்க, சிம்பு தரப்பில் இருந்து அனிருத்தை அணுகியுள்ளனர். ஆனால் அனிருத் நோ சொல்லி அனுப்பியுள்ளார்.

Anirudh STR Simbu Dhanush

அனிருத்: சிம்புவும் அனிருத்தும் மிகவும் நெருக்கமானவர்கள். அப்படி இருந்தும் சிம்பு படத்திற்கு அனிருத் இசையமைக்க ஒத்துக் கொள்ளாதது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இரண்டு படங்களுக்குமே அனிருத் நோ சொன்னது, சிம்புவுக்கு கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தனுஷ் கமிட்டாகி உள்ள அடுத்த படத்திற்கு மட்டும் இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ளார் அனிருத். அதாவது, தமிழரசன் பச்சமுத்து இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இனிக்குதோ: அந்தப் படத்துக்கு மட்டும் அனிருத் இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்து தெரிந்து கொண்ட சிம்பு ரசிகர்கள், அனிருத்துக்கு தனுஷ்னு சொன்னா மட்டும் இனிக்குதோ என கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதே நேரத்தில் பீப் சாங் விவகாரத்தினை மனதில் வைத்துதான் அனிருத், முடியாது எனக் கூறி இருப்பாரோ என்ற கேள்வியையும் எழுப்பி வருகிறார்கள்.

Anirudh STR Simbu Dhanush

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X