நீ மயக்குற மடக்குற கடத்துற… டாணாவில் மெலடியை வெளியிட்ட அனிருத்

சென்னை: நடிகர் வைபவ் மற்றும் நந்திதா ஸ்வேதா ஜோடியாக நடித்துள்ள டாணா திரைப்படத்தின் முதல் பாடலை நேற்று இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார். நீ மயக்குற மடக்குற, கடத்துற என்னும் அழகான மெலடி பாடலை சிந்தூரி பாடியுள்ளார். கவிஞர் கு.கார்த்திக் இப்பாடலை எழுதியுள்ளார்.

நடிகர் வைபவ் கடைசியாக சிக்ஸர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் காமெடி கலந்து கொடுத்திருந்ததால் ரசிகர்களிடமும் பார்வையாளர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது நடிகர் வைபவ் போலீசாக நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் தான் டாணா. இதில் வைபவ் ஜோடியாக நடிகை நந்திதா ஸ்வேதா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு மற்றும் பாண்டியராஜன் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருப்பது அறிமுக இயக்குனர் யுவராஜ் சுப்ரமணி

Anirudh Releases Vaibhavs Taana Movie Song

இப்படத்தை எம்.சி.கலைமாமணி தயாரித்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவை சிவா ஜி.ஆர்.என் மேற்கொள்ள படத்தொகுப்பு பணியை ஜி.கே.பிரசன்னா மேற்கொள்கிறார். இந்த திரைப்படத்தின் முன்னதாக வெளியான டீஸரில் அதிரடி, காதல், நகைச்சுவை மற்றும் திகிலூட்டும் ஒரு சிறிய கதையின் கருவை சொல்லிருந்தனர்.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலை நேற்று வெளியானது. நீ மயக்குற, மடக்குற, கடத்துற என்று பெயரிடப்பட்ட இந்த பாடல் சிந்தூரி பாடியுள்ளார். பாடல் வரிகளை கு.கார்த்திக் எழுதியுள்ளார். இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டிருக்கிறார்.

இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள வைபவ்விற்கு ஒரு வியாதி உள்ளது. பயம், பதட்டம், கோபப்பட்டாலோ, சந்தோஷப்பட்டாலோ குரல் மட்டும் பெண் குரலாக மாறும். அதனால், ஏற்படும் விளைவுகளை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார்களாம். இப்படம் பற்றி பேசிய இது எனக்கு முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தை அளித்துள்ளது. இந்தக் கதையை நான் ரொம்பவே ரசித்தேன். இந்த படம் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்குள் ஏற்பட்ட பின்பே படப்பிடிப்பு தொடங்கியது என்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளர் கலைமாமணி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X