Anirudh - ஆண்ட்ரியாவுடன் இருந்தது உண்மை காதலா?.. பிரேக்கப்பிற்கு இதுதான் காரணம்.. அனிருத் ஓபன் டாக்

சென்னை: Anirudh (அனிருத்) ஆண்ட்ரியாவுடன் இருந்த காதல் குறித்து அனிருத் ஓபனாக பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். முதல் படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் ஹிட்டடித்தாலும் குறிப்பாக ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகம் முழுக்க பரவியது. இதன் காரணமாக ஒரே பாடலில் ஓஹோ என்ற புகழை அடைந்துவிட்டார் அனி. அதனையடுத்து அவர் இசையமைப்பில் தொடர்ந்து படங்கள் வர ஆரம்பித்தன.

Anirudh Reveals About His Relationship With Andrea

முன்னணி இசையமைப்பாளர்: அவர் இசையமைத்த படங்களில் இருக்கும் அத்தனை பாடல்களும் ஹிட்டடித்தன. குறிப்பாக 2கே கிட்ஸின் பல்ஸை பிடித்த அனிருத் அவர்களுக்கு தகுந்த மாதிரி இசையை கொடுத்துக்கொண்டிருக்கிறார். இதன் காரணமாக அவர்தான் தமிழில் தற்போது நம்பர் 1 இசையமைப்பாளர். இளம் ஹீரோக்கள் முதல் வளர்ந்த ஹீரோக்கள்வரை அனிருத்தின் இசையையே விரும்புகின்றனர்.

அதிக சம்பளம்: முன்னணி இசையமைப்பாளராக மாறிவிட்ட அனிருத்தின் இசையமைப்பில் மாதம் ஒரு படம் ரிலீஸ் ஆகும் சூழ்நிலை இருக்கிறது. இந்த மாதம் ஜெயிலர் வெளியானது, அடுத்த மாதம் ஜவான் வெளியாகிறது, அதற்கு அடுத்த மாதம் லியோ வெளியாகிறது. இப்படி படு பிஸியாக இருக்கும் அனிருத் தற்போது பத்து கோடி ரூபாய் அளவுக்கு சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

சர்ச்சை: அனிருத் எவ்வளவு புகழ் அடைந்திருக்கிறாரோ அதே அளவு சர்ச்சையையும் சந்தித்தவர். முக்கியமாக அவருடைய 19ஆவது வயதிலேயே தன்னுடைய 6 வயது மூத்தவரான ஆண்ட்ரியாவை காதலித்தார். இரண்டு பேரும் தனிமையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. அந்தப் புகைப்படங்கள் வெளியானதை அடுத்து அனிருத் கொஞ்சம் சைலெண்ட் மோடுக்கு சென்று இசை மீது கவனம் செலுத்திவருகிறார்.

Anirudh Reveals About His Relationship With Andrea

ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் ஆண்ட்ரியா குறித்து அவர் பேசியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவில் அந்த காதல் குறித்தும் எதற்காக பிரேக் அப் ஆனது என்பது குறித்து பேசியிருக்கிறார்.அந்த வீடியோவில், "நான் இப்போது எந்தக் காதலும் செய்யவில்லை. ஆனால் காதல் செய்யலாம் என்ற முடிவில் இருக்கிறேன். அடுத்த முறை என் வயதைவிட குறைவான வயது உள்ள பெண்ணைத்தான் காதலிப்பேன்.

ஆண்ட்ரியா: நான் ஏற்கனவே ஆண்ட்ரியாவை காதலித்தேன். அப்போது எனக்கு 19 வயது அவருக்கு 25 வயது. அது உண்மை காதலா என்று கேட்டால் அது எனக்கு தெரியாது. அதை பெரிதாக நான் பரிசோதனையும் செய்யவில்லை. எங்கள் காதல் பிரேக் அப் ஆனதுக்கு வயதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அது மட்டுமே காரணம் இல்லை. அது எங்களுக்குள் செட் ஆகவில்லை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X