மாஸ்டர் ஆல்பத்தின் அந்த சீக்ரெட்டை போட்டுடைத்த அனிருத்.. தளபதி ரசிகர்கள் மிரண்டு போய்ட்டாங்க!
சென்னை: மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவின் நாயகன் அனிருத், குட்டி ஸ்டோரி பாடலை பாடி அசத்தியது மட்டுமின்றி, ஆல்பம் குறித்த ஸ்பெஷல் சீக்ரெட் ஒன்றையும் கூறியுள்ளார்.
சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், சிம்ரன், லோகேஷ் கனகராஜ், அனிருத், விஜய்யின் பெற்றோர்கள் மற்றும் பலர் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

ட்விட்டர் சண்டை
மாஸ்டர் படத்தின் டிராக் லிஸ்ட் இன்று வெளியாகி இருந்தது. அதில், அனிருத் இசையில் விஷ்ணு வரிகளில், சிபி வினீத் பாடியுள்ள "தருதல கதறினா" என்ற பாடல் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. உடனடியாக மாஸ்டர் படக்குழுவினர், "போனா போகட்டும்" என டிராக் லிஸ்டில் மாற்றம் கொண்டு வர, மண்டியிட்ட விஜய் என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி ட்விட்டர் சண்டை மூண்டுள்ளது.

பாடலில் ரெய்டு
கத்தி படத்திற்கு பிறகு, மீண்டும் விஜய் படத்திற்கு இசையமைத்துள்ள அனிருத், வருமான வரித்துறை அதிகாரிகள் விஜய் வீட்டில் ரெய்டு நடத்திய பிறகு வாத்தி ரெய்டு பாடலை போட்டாரா? அல்லது ஏற்கனவே அப்படி ஒரு பாடல் இடம்பெற்றதா? என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்து, ரசிகர்களின் மண்டையை கசக்கி பிழிந்து வருகிறது.

கொல வெறிக்கு அப்புறம்
தனுஷின் 3 படத்தில் அனிருத் இசையமைத்த கொலவெறி பாடல், உலகளவில் ஹிட் அடித்த நிலையில், அதே போன்ற ஒரு மேஜிக்கை மாஸ்டர் படத்திலும் குட்டி ஸ்டோரி பாடலாக கொண்டு வந்துள்ளார். படத்தில் விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாடலை, ரசிகர்களுடன் இணைந்து அனிருத் மேடையில் பாடி அசத்தியது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.

என்ன சீக்ரெட்
மாஸ்டர் டிராக் லிஸ்டில் 8 டிராக்குகள் வந்துள்ள நிலையில், மொத்தம் 12 டிராக்குகள் படத்தில் இருப்பதாகவும், அடுத்த இரண்டு டிராக்குகள் விரைவில் ரிலீசாகும் என்றும், மற்ற இரண்டு பாடல்கள், படத்தில் சர்ப்ரைஸாக வரும் என்றும் செம சீக்ரெட்டை போட்டுடைத்து, விஜய் ரசிகர்களை மிரள வைத்துள்ளார் அனிருத்.


Click it and Unblock the Notifications











