Coolie: கூலி படம் எப்படி இருக்குனு ட்வீட் எல்லாம் போட முடியாது.. அனிருத் என்ன இப்படி சொல்லிட்டாரு!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படமான கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று அதாவது ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெற்றுக் கொண்டு உள்ளது. படத்தில் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், அமீர் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இதனால் படத்தின் மீது இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விழாவின் நாயகன் அனிருத் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தியா முழுவதும் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. தெலுங்கு சினிமாவில் இருந்து நாகார்ஜுனா, இந்தி சினிமாவில் இருந்து அமீர் கான், மலையாள சினிமாவில் இருந்து சௌபின் சாஹிர், கன்னட சினிமாவில் இருந்து உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள் என்பதால் படம் மட்டும் சரியாக கிளிக் ஆனால் வேற லெவல் வசூல் உறுதி. இந்தியா முழுவதும் தற்போது மோஸ்ட் வான்டட் இசையமைப்பாளர்களில் ஒருவராக மாறி நிற்கிறார் அனிருத்.

Anirudh Review Coolie Rajinikanth Cooile Movie Audio Launch Fans Happy
Photo Credit:

மற்ற நடிகர்களின் படம் என்றாலே இறங்கி அடிப்பார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு என்றால் சொல்லவா வேண்டும் எனக் கூறும் அளவுக்கு அவரது முந்தைய படங்களுக்கு வேற லெவலில் இசையமைத்துள்ளார். வேட்டையன், ஜெயிலர், பேட்ட உள்ளிட்ட படங்கள் அதற்கு சாட்சி. இந்த படத்தின் பாடல்களும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. அதேபோல் இந்த படத்தின் டிரைலருக்கும் இசை வேற லெவலில் கொடுத்துவிட்டார் அனி.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு: அனிருத்தைப் பொறுத்த வரைக்கும் தான் வேலை செய்யும் படங்களுக்கு அனைத்து பின்னணி இசையும் முடித்துக் கொடுத்த பின்னர், தனது எக்ஸ் பக்கத்தில் படம் குறித்து தனது கருத்தை தெரிவிப்பார். அதிலும் குறிப்பாக அவரது கருத்து அவரது விமர்சனமாகவே பார்க்கப்படுகிறது. அதுவும், அவர் எவ்வளவு ஃபயர் எமோஜிகள், கப் எமோஜிகள், பிளாஸ்ட் எமோஜிகள் போடுகிறார் என்பதை கணக்கில் கொண்டு எல்லாம் படத்தை எடை போடுவார்கள்.

Anirudh Review Coolie Rajinikanth Cooile Movie Audio Launch Fans Happy
Photo Credit:

அனிருத்: இப்படி இருக்கும்போது கூலி இசை வெளியீட்டு விழாவில் பேசுகையில், " இயக்குநர் லோகேஷ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்த கூட்டணி படம் உருவானதற்கு உலகத்தில் மிகவும் மகிழ்ச்சியடையக்கூடிய நபர் முதலில் நான் தான். இந்த முறை பந்தயத்தில் ஜெயிக்கிறோம்.நான் கூலி படத்துக்காக ட்வீட் எல்லாம் போட மாட்டேன். கண்டிப்பா பந்தயத்துல ஜெயிக்கறோம். ட்வீட் எல்லாம் கிடையாது. 10 ஃபயர், 10 கப் போட்டுக்காங்க எனக் கூறியுள்ளார். அனிருத் இவ்வாறு கூறியுள்ளது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இவரது பேச்சுக்குப் பின்னர் ரசிகர்கள் பலரும் கூலி ரூபாய் 1000 கோடிகள் வசூலை எட்டும் முதல் தமிழ் படமாக மாறும் என பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X