'இம்மார்டல்ஸ்' ஆல்பம் இசையை சுட்டு கத்தி டீசரில் போட்ட அனிருத்
சென்னை: கத்தி படத்தின் டீசர் இசையை அனிருத் இம்மார்டல்ஸ் என்ற ஆல்பத்தில் திருடியுள்ளார்.
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கத்தி படம் பல சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்பதால் அதை வெளியிட சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
படத்தை பற்றி வரும் செய்திகளை விட சர்ச்சை பற்றி தான் அதிகம் வருகிறது.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்
கத்தி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது அது 3 ஆண்டுகளுக்கு முன்பு நியூயார்க் டைம்ஸில் வெளியான விளம்பரத்தை காப்பியடித்துள்ளது போன்று உள்ளது என்று சர்ச்சை கிளம்பியது.

கதை
கத்தி படத்தின் கதை தன்னுடையது என்று கூறி மீஞ்சூர் கோபி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இசை
கத்தி பட டீசரில் அனிருத்தின் இசை ஆஹா, ஓஹோ என்றனர். ஆனால் அது ஒன்றும் அவர் போட்ட இசை அல்ல, காப்பியடித்தது என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

இம்மார்டல்ஸ்
டிவிபிபிஎஸ் மற்றும் டோனி ஜூனியரின் இம்மார்டல்ஸ் என்ற ஆல்பத்தில் இருந்து தான் அனிருத் இசையை சுட்டுள்ளார்.
இது தான்
அனிருத் இசையை சுட்ட ஆல்பம் இது தான்.


Click it and Unblock the Notifications











