ரஜினி படத்துக்கு முதல் முறை இசை... அனிருத்தின் கனவு நனவானது!

By Shankar

Recommended Video

அனிருத் இசையில் தெறிக்க விடப்போகும் ரஜினியின் அடுத்த படம்- வீடியோ

அனிருத் ஒரு இசையமைப்பாளராக அறிமுகமாகி பரபரவென புகழேணியில் ஏறிக் கொண்டிருந்த நேரம். அப்போதுதான் நடிகை ஆன்ட்ரியாவுடன் அவர் லிப்லாக் அடித்த காட்சிகள் இணையத்தில் வைரலாய் வலம் வர ஆரம்பித்தன. அந்தப் படங்களோடு நிற்கவில்லை. தொடர்ந்து அனிருத் பற்றி வில்லங்கமான செய்திகள், குறிப்பாக ரஜினி குடும்பத்தோடு தொடர்புபடுத்தி வர ஆரம்பித்தன. பீப் பாட்டில் வேறு மாட்டிக் கொண்டார்.

அப்போதுதான் ஒரு நாள் அனிருத்தை அழைத்த ரஜினி, "சினிமாவில் பெயரைக் காப்பாற்றிக் கொள்வது முக்கியம். நீ நல்லா வளர்ந்து வர்ற டைம் இது. யார் கண்டா... என் படத்துக்கே கூட நீ இசையமைக்கும் வாய்ப்பு வரும்... பாத்துக்க," என்று அன்பாக அறிவுறுத்தி அனுப்பினாராம்.

Anirudh's dream of composing Rajini movie comes true

அனிருத் தன்னை மாற்றிக் கொண்டாரோ இல்லையோ... ஆனால் ரஜினி சொன்னது நடந்துவிட்டது. ஆம், இப்போது ரஜினியின் புதிய படத்துக்கு இசை அனிருத்தான். தன் மாமா நடிக்கும் படத்துக்கு இசையமைக்க வேண்டும் என்பது அனிருத்தின் கனவும்கூட (அனிருத்தின் சொந்த மாமாதான் ரஜினி). அது இன்று நிறைவேறிவிட்டது.

இன்றுதான் இதனை அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனமும் அறிவித்துள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் அதிரடி அரசியல் படமான இதில், ரஜினி இரு வேடங்களில் நடிப்பார் எனத் தெரிகிறது. மற்ற விவரங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X